Mahila Samman saving scheme in Tamil | ெபண்கள் சேமிப்பு திட்டம்
Mahila Samman saving scheme in Tamil
பெண்களுக்கான புதிய சேமிப்பு திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார். அதன்படி பெண்கள் பெயரில் தொடங்கப்படும் 2 ஆண்டு நிரந்தர வைப்புக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டுள்ளது.
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பெயரில் நிரந்தர வைப்பு தொடங்க முடியும். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வைப்புத்தொகை இருக்கலாம். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலத்துக்கு முன்பு பகுதியளவில் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இதன்மூலம் குடும்ப தலைவிகள் பெயரிலும், பெண் குழந்தைகள் பெயரிலும் பணத்தை சேமிப்பு திட்டத்தில் வைப்பது அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2025 மார்ச் மாதம் வரை அதாவது 2 ஆண்டுகள் வரை இந்த சேமிப்பு திட்டத்தில் பயன் அடைய முடியும்.
Read Also: பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் நடவடிக்கை
இதுதவிர பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து பட்ஜெட் உரையில் பேசிய நிர்மலா சீதாராமன், தீனதயாள் அந்தியோதயதா யோஜனா தேசிய கிராமப்புற மக்கள் மேம்பாட்டு திட்டத்தில் 81 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மகளிருக்கு சமுகத்தில் உரிய அங்கீகாரம் அளித்து அவர்களை பொருளாதார ரீதியாக வலுவாக்கும் நோக்கம் எட்டப்பட்டுள்ளது.
பிரமதர் கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2.25 லட்சம் கோடி நிதியுதவியில் பயனடைந்தவர்களில் 3 கோடி பேர் பெண் விவசாயிகள் ஆவர். அவர்களுக்கு மட்டும் ரூ 54,000 கோடி திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.