அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023

Ten Rupee Coin order PDF in Tamil | பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் நடவடிக்கை

Ten Rupee Coin order PDF in Tamil |  பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் நடவடிக்கை

Ten Rupee Coin order PDF in Tamil

மாநகர் போக்குவரத்து கழகம் (சென்னை) லிமிடெட், சென்னை அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும்போது உாிய பயணச்சீட்டினை பெற ரூ.10 மதிப்பிலான நாணயங்களை நடத்துநர்கள் மறுப்பின்றி பெற்று உரிய பயணசீட்டினை பயணிக்கு வழங்குமாறு ஏற்கனவே க.எண் 174/15657 காணும் இவ்வலுவலக சுற்றறிக்கை வழி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Also: Environment Protection Award in Tamil

எனினும், போக்குவரத்து துறை, தலைவர் அலுவலக கடிதத்தில், மாநகா் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நடத்துநர்கள் தமது பணியின்போது, பயணிகள் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நாணயத்தை பயணச்சீட்டு வாங்க, அளிக்கும்போது நடத்துநர்கள் பெற மறுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, அனைத்து அரசு போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசால் வெளியிடப்படும் ரூ10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நாணயத்தை பயணிகள் பயணச்சீட்டு வாங்க மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் நடத்துநரிடம் அளிக்கும்போது அதனை நடத்துநர்கள் மறுக்காமல் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு உரிய பயணச்சீட்டு அவர்களுக்கு வழங்கிட வேண்டும், என இதன்மூலம் மீண்டும் உத்தரவிடப்படுகிறது.

எக்காரணம் கொண்டு பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பலான நாணயத்தை பெற்றுக்கொள்ள நடத்துனர்கள் மறுக்கக்கூடாது. அவ்வாறு நடத்துனர்கள் ரூ10 மற்றும் ரூ20 மதிப்பிலான நாணயத்தினை பெற்றுக்கொள்ள மறுப்பதாக புகார் பெறப்படின் சம்மந்தப்பட்ட நடத்துநாின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏதுவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள் (போ) மற்றும் அனைத்து நேரகாப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் ஏதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் பேருந்து பயணத்தின்போது இதுபோன்ற சிக்கல் எதிர்கொண்டால், இந்த கடிதத்தை அவர்களிடம் காட்டவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் அனுப்பவும், விழிப்புணர்வு பெறட்டுமே..

Ten Rupee Coin order PDF in Tamil
Ten Rupee Coin order PDF in Tamil

Related Articles

Latest Posts