You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Magalir Urimai Thogai மகளிர் உரிமை தொகை உங்களுக்கு கிடைக்கவில்லையா அடுத்த என்ன செய்வது

Magalir Urimai Thogai

Magalir Urimai Thogai மகளிர் உரிமை தொகை உங்களுக்கு கிடைக்கவில்லையா அடுத்த என்ன செய்வது

Magalir Urimai Thogai

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை இன்று தொடங்கிவைத்தார். இதையொட்டி, தமிழக அரசு நேற்று முதலே குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையை விடுவிக்கும் பணியை தொடங்கியது. இதேபோன்று, இன்றும் உரிமை தொகையை வங்கியில் வரவு வைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் தகுதியிருந்தும் இன்னும் பல குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை வந்து சேரவில்லை என்ற புகாரும் மறுபக்கம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிவருகின்றனர்.

Read Also: மகளிர் உரிமை தொகை அரசாணை

அதன்படி கடந்த 13ம் தேதி தமிழக அரசு சார்பில் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டிருந்தது, அதில் கூறியிருப்பதாவது

அதன்படி, கலைஞர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சாிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும் தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு 18.9.2023 முதல் அனுப்பிவைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராக செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள் அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் போது, சம்மந்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மை தொடா்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராக செயல்படுவார். இணையதளம் வழியாக பெறப்படும் புகார்கள் மேல்முறையிட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை பின்பற்றி விசாரிக்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை நீங்களும் தவறாமல் பின்பற்றினால் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.