Latest TN Government Job | அரசு துறையில் 794 காலி பணியிடங்கள்
Latest TN Government Job
ஊரன வளா்ச்சி, ஊராட்சி துறைகளில் காலியாக உள்ள 794 பணியிடங்களுக்கான தேர்வு மே 27ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சு அமிர்தஜோதி செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறைகளில் மேற்பார்வையாளர், இளநிலை வரைவு அலுவலர் பதவிகளுக்கான 794 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளுது. இந்த பணியிடத்திற்கான விண்ணப்பிப்போர் கட்டடக்கலை பட்டயப்படிப்பு அல்லது கட்டடக்கலை பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
Read Also: டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு குளறுபடி
இதில் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் 37 வயதுக்குட்பட்டவராகவும், இதர வகுப்பினருக்கு (பிசி,எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு இல்லை. இதற்கான தேர்வு மே 27ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் சென்னை தொழில்சார் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வரும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இதற்கான நெ்னனை, தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 9487139271 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை டிஎன்பிஸ்சி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.