Kendriya Vidyalaya Admission 2023 in Tamil | கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கை தேதி அறிவிப்பு
Kendriya Vidyalaya Admission 2023 in Tamil
கேந்திாிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சோ்க்கைக்கு மார்ச் 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 27ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 17ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும்.
மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களையும் www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31ம் தேதியில் 6 ஆக இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை வழி காட்டு நெறிமுறைகள்
www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளள. ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து காலியிடங்கள் இருந்தால், 2ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு சம்மந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏப்ரல் 3ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, 12ம் தேதி மாலை 4 மணிக்கு முடிவடையும்.
Read Also: மழலையர் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு விதி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பள்ளியில் காலியிடங்கள் (2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள்) இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.