போலி சான்றிதழ் கொடுத்து 31 ஆண்டுகள் பணியாற்றிய பலே தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
காவேரிபட்டணம் அருகே அரசு பள்ளியில் போலி சான்றிதழ் மூலம் 31 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
READ THIS: மாணவர்கள் நலனின் அக்கறை இல்லையாம் – அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அடுத்த சோபனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (56). இவர் கடந்த 1991 ஜூன் 17ம் தேதி, காவேரிபட்டணம் அடுத்த சாத்தனூர் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். பின்னர் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று பாறையூர், திம்மேநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றியுள்ளார். இவரது பணி பதிவேட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு சான்றிதழ்களை முன்னிலைப்படுத்தி பதிவு செய்ய, பல முறை அறிவுறுத்தியும், இவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு தேர்வுகள் உதவி இயக்குனா் ராகினி தலைமை ஆசிரியை சுமதி, தனது 10ம் வகுப்பு சான்றிதழ் நகலில் போலியாக திருத்தம் செய்து பணியில் சேர்ந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், துறை ரீதியாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யுமாறும் வட்டார கல்வி அலுவலர் சபிக் ஜானுக்கு கடந்த 10ம் தேதி கடிதம் அனுப்பினார்.
இந்த தகவலை வட்டார கல்வி அலுவலர், கடிதம் மூலம் மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடிக்கு அனுப்பினார். இந்த நிலையில் தலைமை ஆசிரியை சுமதி, தன் மீதான புகாரின் மீது உரிய அளிக்க விளக்கம் அளிக்காமலும், பிப்ரவரி 3ம் தேதி முதல் தொடர் மருத்துவ விடுப்பு எடுத்தும் இருந்துள்ளார். இதையடுத்து கல்வி அலுவலர் சுமதியை, சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுளார்.
போலி ஆவணங்கள் சமர்பித்து 31 ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியையாக பணியாற்றிய சுமதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.