புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்கள் நலனில் அக்கறையின்மையோடு செயல்பட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கையியல் பாடப்பிரிவிற்கு அனுமதி வாங்கும்போது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்துகொள்வதாக கூறியுள்ளனர்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
ஆனால் பள்ளி தலைமை ஆசிரியாசிரியரோ பள்ளி தொடங்கி 5 மாதம் ஆகியும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து எந்த நடவடிக்கை எடுக்காமலும், துறைக்கு தகவல் தெரிவிக்காமலும் இருந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர் நியமனம் குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, இப்பாடத்திற்கு இப்பகுதியில் ஆசிரியர்கள் இல்லை எனவும், எனவே படித்த ஆசிரியர்கள் இருந்தால் நீங்களே அழைத்து வாருங்கள் என கூறியதாக கூறப்படுகிறது.
மாணவர்கள், தேர்வு நேரம் நெருங்கி வருவதால் ஆசிரியர்கள் இல்லை என்றால் நாங்கள் எப்படி படிக்க முடியும் என்றும், உங்களை நம்பிதான் எங்கள் நாங்கள் இங்கு சேர்ந்தோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.
அதிருப்தி அடைந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து முறையிட்டுள்ளனர். எனவே மாணவர்களின் மீது அக்கறையின்மையோடு செயல்பட்ட மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கசாமி (58) என்பவரை ஆட்சியர் உத்தரவின்பேரில், தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது, புதியதாக தொடங்கப்படும் பாடப்பிரிவிற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்ய ஓரிரு ஆண்டுகள் ஆகும். பணியிடம் நிரப்பும் வரை அப்பள்ளி நிர்வாகம்தானம் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தற்பொழுது மாணவர்கள் நலன் கருதி தேர்வுக்கு சிறப்பாக தயார் செய்யும் வகையில் இரண்டு ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்,
என்றார்.