அரசு பள்ளியில் அரட்டை - தலைமை ஆசிரியை உள்பட ஏழு பேருக்கு நோட்டீஸ் - சிஇஒ அதிரடி
TO JOIN IN TELEGRAM GROUP - CLICK HERE
கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடந்த மார்ச் 1ம் தேதி காலை 9.30 மணியளவில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு ஆசிரியர்களின் நடவடிக்கைகள் தலைகீழாக இருந்ததால், அதிர்ச்சி அடைந்த முதன்மை கல்வி அலுவலர் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், முதன்மை கல்வி அலுவலர் குறிப்பாணையில் கூறியிருப்பதாவது, பள்ளி திடீர் ஆய்வின்போது, பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை மற்றும் சக ஐந்து ஆசிரியைகள் தங்களுக்குரிய வகுப்புகளுக்கு செல்லாமல் பள்ளி வளாகத்தில் வட்டமாக கூடி அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
READ ALSO THIS | அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல், வளாகத்தில் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தனர். ஆசிரியர் (ஆங்கிலம்) ஒருவர் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு, பள்ளியை விட்டு வெளியே சென்றுள்ளார். மற்றொரு ஆசிரியர் காலை 9.30 மணி ஆகியும் கூட பள்ளிக்கு வரவில்லை.
தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியைகளின் இத்தகைய செயல் பள்ளி வளாகத்தினுள், மாணவர்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் இருப்பதையும், காலை 9.35 மணிக்கூட தங்களது கற்றல், கற்பித்தல் பணியை மேற்கொள்ளாமல், பொறுப்பில்லாமல் இருந்தது கற்பித்தல் பணியில் தங்களுக்கு ஈடுபாடு இல்லாமல் இருப்பதை காட்டுகிறது.
இடைநிலை ஆசிரியை ஒருவர் காலை 9.40 மணிக்கு வருகை தந்து, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியை முன்னிலையில் வருகை பதிவேட்டில், காலை 9 மணி என்று குறிப்பிட்டு கையொப்பமிட்டார். இந்த ஆசிரியையின் நேர்மையற்ற செயலை, பள்ளி தலைமை ஆசிரியை விளக்கம் ஏதும் கோரவில்லை.
தலைமையாசிரியையின், இத்தகைய செயல் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதும், பள்ளியை நிர்வகிப்பதில் ஈடுபாடாற்று இருப்பதும், ஆசிரியைகள் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வந்து கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்தாததும், தலைமை ஆசிரியை தனது கடமையை தட்டி கழிக்கிறார் என்றே காட்டுகிறது. மேலும் தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியைகள் தங்களின் கடமையிலிருந்து விலகியிருக்கிறார்கள்.
இவ்வாறு, குறிப்பாணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியை உள்பட ஏழு பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் கரூா் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
NOTICE PDF DOWNLOAD HERE