சென்னை – கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் தங்களது செயல்பாட்டிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளார்.
கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கடந்த 11ம் தேதி கார்வழி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு பணிக்கு சென்றார்.
ஆய்வின்போது, அந்த பள்ளி ஆசிரியர் பெண் ஆசிரியைகள், மாணவிகள் முன்னிலையில் தனது சட்டை பட்டனை சரியாக போடாமல் இருந்ததாக கூறி, முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும் அந்த ஆசிரியர் இரண்டு பட்டன்களை போடாமல் இருந்ததாகவும் அவரது விளக்க நோட்டீஸில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒழுங்கீனமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, அதே பள்ளியில் மாணவர்களுக்கு என வழங்கப்பட்டிருந்த விலையில்லா கட்டுரை ஏட்டினை, பள்ளியின் இயக்கப் பதிவேடு பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. மேலும், மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட கட்டுரை ஏட்டினை பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |