Kalai Thiruvizha 2022 | கலை திருவிழா அரசு பள்ளியில் தொடக்கம்
Kalai Thiruvizha 2022
2022-2023 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்ட தொடரில் பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி கலை திருவிழா அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன்படி, மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலை திருவிழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Read Also: Children Day in Tamil | குழந்தைகள் தினம் நவம்பர் 14ம் தேதி
தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும், பள்ளி கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
பள்ளி கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைத்தல்
கலை என்பது குழந்தைகள் தங்கள் கருத்துகளை, தாங்கள் நம்புவதற்கும், சத்தியமானவற்றை ஆராயவும் கற்றுக்கொள்வதற்கும் ஒரு இடம்
கலை செயல்பாடுகள், குழந்தைகளின் பிற கற்றல் செயல்முறைகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது.
இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும் அவர்களுக்க பிடித்த கலையை கற்றுகொள்வதால், அவர்களை சுற்றியுள்ள உலகத்தை பற்றி ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. இதனை முன்னிருத்தி இவ்வாண்டு 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கலை திருவிழா பல்வேறு கலை வடிவங்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், உள்ளுர் கலைஞர்கள் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும். தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள இச்செயல்பாடுகள் வழிவகுக்கும்.
கலை திருவிழா
- பிரிவு1 - 6 முதல் 8ம் வகுப்பு வரை
- பிரிவு 2 – 9 மற்றும் 10ஆம் வகுப்பு
- பிரிவு 3 - 11 மற்றும் 12ம் வகுப்பு
பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
மாநில அளவிலான கலை திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.
மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மைபெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.
கலை திருவிழா போட்டி தேதி
- பள்ளி அளவில் 23.11.2022 முதல் 28.11.2022
- வட்டார அளவில் 29.11.2022 முதல் 5.12.2022
- மாவட்ட அளவில் 6.12.2022 முதல் 10.12.2022
- மாநில அளவில் 03.01.2022 முதல் 9.1.2023
- அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் கலை திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவர்களின் பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டுமாய் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆய்வு அலுவலர்கள் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளி எமிஸ் வழியாக ஒவ்வொரு போட்டியில் பங்குபெறும் மாணவரின் விவரங்களை போட்டி வாரியாக பள்ளி அளவில் பதிவு செய்ய வேண்டும். போட்டிகள் முடிந்த பின் தே்ாவான/வெற்றி பெற்ற மாணவ, மாணவியரின் பெயரை பதிவு செய்ய வேண்டும். இந்த மாணவரின் பெயர் அடுத்த நிலை போட்டிக்கு வட்டார அளவில் பார்வையிட இயலும், வட்டார அளவிலும் தேர்வான/வெற்றிபெற்ற மாணவ, மாணவியரின் பெயரை இவ்வாறே அந்த நிலையில் உள்ள பொறுப்பு அலுவலர் எமிஸ்ல் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.
இவ்வாேற மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டி வாரியாக தேர்வான மாணவ, மாணவியாின் பெயரும் முதன்மை கல்வி அலுவலரின் எமிஸ் லாகின் வழியாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். இந்த மாணவரின் பெயர்களே மாநில அளவிலான போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இதற்கான செயல்முறை விளக்க காணொளி டிஎன்எஸ்இடி யூடியுப் சேனலில் விரைவில் வெளியிடப்படும். அதனை பின்பற்றி அனைத்து நிலைகளிலும் தரவுகள் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.