Children Day in Tamil | குழந்தைகள் தினம் நவம்பர் 14ம் தேதி
Children Day in Tamil
குழந்தைகள் தினம் கவிதை
“குழந்தைகளுக்காப் புத்தகங்கள் அவர்கள் தங்களைக் கையில் எடுத்து உச்சி முகர்ந்து வாசிக்கமாட்டார்களா எனத் தவமாய் தவமிருக்கின்றன.”
குழந்தைகளின் உண்மையான நண்பன் புத்தகங்கள்தான். புத்தகம் மட்டுமே நிரந்தர நண்பனாக இருக்கமுடியும்.
“புத்தகமே இல்லாத குழந்தைதான் உலகின் உண்மையான அனாதை” – சிஸெரோ.
“இன்றைய பல்வேறு அவலங்களுக்கான ஒற்றைத் தீர்வு புத்தக வாசிப்பைப் பரவலாக்குவதுதான்” – ஐ.நா. சபையின் சமீபத்தய தீர்மானம்.
Read Also: இந்தியாவில் 22 கோடி குழந்தைகள் பாதிப்பு
பள்ளியில் பரீட்சைக்குத் தயாராவதற்காகப் படிப்பதும், பொழுதுபோக்கு அம்சமாகத் தொடங்கிப் பிறகு இலட்சியமாக விரிவடையும் வாசிப்பும் எப்போதுமே ஒன்றாக முடியாது. வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்கள் மிக அற்புதமான வாசிப்புப் பழக்கமுடையவர்கள் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லும் நேரமிது.
“புத்தக வாசிப்பைவிட வலுவான அறிவார்ந்த குழந்தைப் பருவம் வேறு இல்லை. நூலகத்தைவிட சிறந்த குழந்தை வளர்ப்பிடம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை” – பேராசிரியர் யஷ்பால்.
குழந்தைகள் உலகம் புத்தகத்தைப் போல தனக்குள் புதையல்களைக் கொண்டது.
கார்ட்டூனில் விரியும் வானம்,
பரபரப்பு இல்லாத கவித்துவம் பூக்கும் நட்பு வட்டம்,
பட்டமாய் மிதக்கும் கனவு ராஜ்யம்,
அந்தச் சிரிப்பில் எத்தனை திறமைகள்,
சண்டை, சமாதானம் அனைத்தும் ஒரு புன்னகை வீச்சில்….
அவர்களை முத்தமிடத் துடிக்கிறீர்களா ?
அள்ளிக் கொஞ்சிடத் தவிக்கிறீர்களா ?
முத்தான புத்தகப் பூங்கொத்தால் முத்தமிடுங்கள் !
அற்புத அறிவு நூல்களால் அள்ளிக் கொஞ்சுங்கள்.
நல்ல கதைசொல்லிகளாய் மாறுவோம்,
வாசித்துக் கதை சொல்வோம்.
குழந்தைகள் தின வாழ்த்துகள்.
- பேரா.க.லெனின்பாரதி
- தலைவர்
- நூலக வாசகர் வட்டம்