Job Mela at SNMV College | எஸ்என்எம்வி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
Job Mela at SNMV College
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் சார்பில் கோவை எஸ் என் எம் வி (SNMV) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் போ. சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். TN APEX SKILL DEVELOPMENT CENTRE FOR LOGISTICS நிறுவன அதிகாரிகள் முகுந்தன் மற்றும் ஜோயல் ஆகியோர் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.
Read Also: எஸ்என்எம்வி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
U plus Technologies, KIML, Amphenol, Muthoot microfin போன்ற நிறுவங்கள் மாணவ மாணவிகளை தேர்வு செய்ய கலந்து கொண்டன. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வேலைவாய்ப்பு முகாமில் 554 மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இம்முகாமை கல்லூரி நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.க. லெனின்பாரதி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர் எம். தினேஷ், வணிகவியல் துறை உதவி பேராசிரியைகள் G.வனிதாமணி, A.பிரியா, P.J.பாலகுமரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.