You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ஜாக்டோ ஜியோ மாநாடு எந்த பயனிமில்லை| செல்வ.ரஞ்சித்குமார் பார்வை

TN CM Latest News in Tamil

ஜாக்டோ ஜியோ மாநாடு எந்த பயனிமில்லை | செல்வ.ரஞ்சித்குமார் பார்வை

ஜாக்டோ ஜியோ மாநாடு

செல்வ.ரஞ்சித்குமார் அவர்கள் ஜாக்டோ ஜியோ மாநாடு குறித்து வெளியிட்ட செய்தியில்

ஆக. . . அரசு ஊழியர் - பணியாளர் - ஆசிரியர் மாநாட்டால். . . . எந்தப் பயனுமில்ல.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்று கையெழுத்திட்டதாகக் கூறும் இரு கோப்புகளையும் முன்னரே முடித்துக் கொடுத்திருக்கலாம். மற்றபடி அவர் வழக்கம் போல சொன்னதையேதான் மீண்டும் சொல்லியுள்ளார். 

Also Read: Savukku Shankar Teachers Issue

இதற்கு இவ்வளவு உடல் பொருள் ஆவியை வழங்கி & வாங்கி  உறுப்பினர்கள் மத்தியில் தேவையற்ற நம்பிக்கையை விதைத்து மீண்டும் ஒருமுறை அவர்களை ஏமாற்றியிருக்க வேண்டாம். ஒருசில திமுக விசுவாசச் சங்கங்களின் வெற்று விளம்பரத்திற்காக ஜாக்டோ-ஜியோ இரையாக்கப்பட்டுள்ளது. எனது இக்கருத்திற்கு எதிராகப் பதில்கூற விரும்பும் எவரும் (திமுக விசுவாசச் சங்கத்தினரைத் தவிர்த்த எவரும்) தங்கள் மனசாட்சியை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

இப்போது முதல்வர் சொன்னவை எதுவும் இதற்கு முன் தங்களுக்குத் தெரியாதா?. . . .
இதுவும் போராட்ட வடிவமே என்று அண்டார்க்டிக்காவில் கம்பு சுத்துவோருக்கு எனது பதில் ஒன்றே. . . .
இனி தற்போதைக்கு கோரிக்கைகள் சார்ந்து 2024 வரை எந்தவொரு போராட்டமும் யாரும் நடத்திவிடாதபடி மொத்தமா கட்டையப் போட்டதற்கு வாழ்த்துகள்! கழுதைல வேற என்னத்தச் சொல்ல. . .


Last but not least. . . எப்பவும் ஏமாற்றத்தை மட்டுமே பார்த்துவரும் எனது அருமை ஆசிரிய & அரசு ஊழியர் சொந்தங்களே!. . .

இந்த ஏமாற்றத்தில் இருந்தாகிலும் நமது கோரிக்கைகள் சார்ந்து முதலில் தாங்கள் சார்த்திருக்கும் சங்கங்களில் எந்தளவு மிகை அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள முன்வாருங்கள். மனம் தளர வேண்டாம்.
நாம் இன்று துய்க்கும் & நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றும் எடுத்த எடுப்பிலேயே யாருடைய தயவாலோ / கருணையாலோ கிட்டிவிடவில்லை. பல கட்ட வலுவான. . .(Mark my words) பல கட்ட வலுவான. . . உறுதியான. . . தொடர் போராட்டங்களால் மட்டுமே கிட்டியுள்ளது.
எனவே, வரலாறு கற்பித்துள்ள பாடங்களைக் கற்று அதற்கேற்ப தயாராக முன்வாருங்கள். நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நீண்ட நெடியதே!
யார் சொன்னாலும். . . I'm extremely sorry to say this எவன் சொன்னாலும். . . . எதன்மீதும் வீண் நம்பிக்கை வைத்து ஏமாறாது, உங்களது போர்க்குணத்தின் மீது மட்டும் நம்பிக்கை வையுங்கள் என்ற வேண்டுகோளோடே,
_செல்வ.ரஞ்சித் குமார்_