You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Savukku Shankar Teachers Issue | சவுக்கு சங்கருக்கு பதிலடி கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்

Savukku Shankar Teachers Issue

Savukku Shankar Teachers Issue | சவுக்கு சங்கருக்கு பதிலடி அடி கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்

சமூக ஊடகமான யுடியூப் சானல்களில் சவுக்கு சங்கர் அடிக்கடி சென்று அரசியல், அரசு துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்தான தகவல்களை பேசி வருகிறார். இதன்மூலம் தனக்கென சமூக வலைதளங்களில் ஒரு பார்வையாளர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில், இறந்த மாணவியையும், சிறுவர் ஒருவரை தொடர்பு படுத்தி பேசியது சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில், கல்வித்துறை உள்ள பிரச்னைகளை குறித்தும், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பெயில் என்ற தலைப்பில் விகடனில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. கட்டுரையில் இடம்பெற்று தகவல்கள் தவறானது எனவும், போலியான செய்தி எனவும் கூறி உதயநிதி ரசிகர்கள் பல இடங்களில் மாத இதழை தியீட்டு எறித்தனர்.

TN School Registers PDF | பள்ளி பதிவேடு பராமரிப்பு பணி | ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

இந்த நிலையில், ஆதன் யுடியூப் சேனலில் சவுக்கு சங்கர், பள்ளி கல்வித்துறை சீரழிக்கும் கும்பல் என்ற தலைப்பில் நேற்று முன்தினம் பேசினார். அதில், ஆசிரியர்களால் கல்வித்துறை சீரழிந்துவிட்டது என்றும், லட்ச கணக்கில் சம்பளம் பெற்றுக்கொண்டு அவர்கள் வேலை செய்வதில்லை என்றும், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் புரோக்கர்களாக செயல்பட்டதாகவும் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பின்னர் ஆசிரியர்களுக்கு தலையில் இரண்டு கொம்பு உள்ளதா, அவர்களுக்கு என்ன கேடு உள்ளிட்ட தரக்குறைவான வார்த்தைகளாலும் பேசியிருந்தார். விமர்சனம் விமர்சனமாக வைக்காமல், தரம்தாழ்ந்து ஆசிரியர்களை இழிவுப்படுத்தியதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவா் சவுக்கு சங்கருக்கு பதிலடி கொடுத்துள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 20 நிமிடம் வரை உள்ள வீடியோவை அவர் வெளியிட்டு, தனது கருத்துகளால் சவுக்கை விளாசியுள்ளார்.   

Video Link Here - Click Here