ITK Volunteers Training | இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ITK Volunteers Training
இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
கல்வியின் அடிப்படையான எண்ணறிவும் எழுத்தறிவும் அனைத்து மாணவர்களும் பெற்றிருக்க வேண்டியது மிக அவசியம் என்பதை மனதிற்கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு உறுதுணைபுரியும் வகையில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்க சிறப்பு கவனம் தேவைப்படுவர்கள் கண்டறியப்பட்டு, இல்லம் தேடி கல்வி மையங்களில் அவர்களுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
Read Also: இல்லம் தேடி தன்னார்வலர்கள் சம்பளம்
இதுகுறித்து தன்னார்வலர்களுக்கு நவம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது டிசம்பர் மாதத்தில் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி குறுவள மைய அளவில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்கு ஓவ்வொரு குறுவள மையத்திற்கு நான்கு அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும். இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் 15.12.2022 அன்று பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17.12.2022 அன்று குறுவள மைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.
இதற்கான கட்டகம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.