அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.3 C
Tamil Nadu
Monday, December 11, 2023

Illam Thedi Kalvi Salary | இல்லம் தேடி தன்னார்வலர்கள் சம்பளம்

Illam Thedi Kalvi Salary | இல்லம் தேடி தன்னார்வலர்கள் சம்பளம்

Illam Thedi Kalvi Salary

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பது அப்படியே…

இல்லம் தேடி கல்வி ஆசிரியர்களுக்கு நூலக புத்தகத்தை தூசி தட்டும் பணி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதில், இல்லம் தேடி கல்வி திட்ட பணி முடங்கிய நிலையில், அதற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு புத்தகங்களை தூசி தட்டி துடைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Illam Thedi Kalvi Thittam Guide PDF Download 2021

கடந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று பரவல் இருந்ததால், அரசு பள்ளி மாணவர்களின் வீட்டுக்கே சென்று டியூசன் எடுக்கும் திட்டம் அறிமுகமானது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதற்கான, இரண்டு லட்சம் தன்னார்வ ஆசிரியர்கள் மாதம் ரூ1000 ஆயிரம் ஊக்கத்தொகையில் நியமிக்கப்பட்டனர். அதேபோல், திட்டத்தை விளம்பரம் செய்ய, கலைக்ககுழுக்களும் நியமிக்கப்பட்டன. இந்தநிலையில், கடந்த கல்வி ஆண்டில் இயல்பு நிலை திரும்பி, பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், இந்த திட்டம் நீடிப்பதாக கூறி, அரசு தரப்பில் ரூ.200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், டியூசன் எடுப்பது உள்பட, திட்ட பணிகள் ஏதும் நடப்பதாக தெரியவில்லை.

இதற்கிடையில், தன்னார்வ ஆசிரியர்களுக்கு தினமும் ரூ.500 சம்பளத்தில் புதிய பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலர்கள், அரசு பள்ளியில் உள்ள நூலக புத்தகங்களை தூசி தட்டி சுத்தம் செய்து, அடுக்க வேண்டும். இதற்கு பள்ளி சார்பில் அவர்களுக்கு தினமும் 500 ரூபாய் சம்பளம் தர வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்போில், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு நிதி மட்டும் ஒதுக்கப்பட்டு, அதன் பணிகள் நின்று போனது தெரியவந்துள்ளது. இதனால் சும்மா இருக்கும் தன்னார்வலர்கள் கூடுதல் சம்பளத்துடன் வேறு பணி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி கூறுகிறது.

இன்றும் பல தன்னார்வலர்கள் தங்களது மாத ஊக்கத்தொகை பெறாமல் சுயநலம் பாராமல், பணியாற்றும் வரும் நிலையில், தினமலர் இந்த செய்தி என்று பெயாில் வன்மத்தை கக்கியுள்ளது.

Related Articles

Latest Posts