ITK Volunteers Student Admission | மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பணி
ITK Volunteers Student Admission
இல்லம் தேடி கல்வி அலுவலர் சிறப்பு இளம்பகவத், தன்னார்வலர்களுக்கு வழங்கிய அறிவுரையில் கூறியிருப்பதாவது,
வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஒவ்வொரு குடியிருப்புகள் தோறும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
Read Also: ITK Volunteers Salary Latest News
ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் புதிதாக சேர உள்ள மாணவர்களின் பெற்றோரைச் சந்தித்து தன்னார்வலர்கள் அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகளையும் சிறப்புத் திட்டங்களையும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏப்ரல் முதல் கோடை விடுமுறை முழுவதும் நடைபெற வேண்டும். இதற்கென இல்லம் தேடிக் கல்விச் செயலியில் உருவாக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு படிவத்தில் தன்னார்வலர்கள் தங்களது விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் சந்தித்த மாணவர் மற்றும் பெற்றோர் குறித்த விவரங்களையும் பதிவு செய்தல் வேண்டும்.
தன்னார்வலர்கள் பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பை பெற்று அரசுப் பள்ளிகளில் அதிக சேர்க்கை நடைபெற உறுதுணை புரிய வேண்டும். சிறப்பான பரப்புரையில் ஈடுபட்டு அதிக மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் தன்னார்வலர்கள் பரிசளித்து பாராட்டப்படுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.