ITK Volunteers Salary Latest News | இல்லம் தேடி தன்னார்வலர்கள் ஊதியம்
ITK Volunteers Salary Latest News
இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தும் நிலையில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களிடம் ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க , 2021 நவம்பரில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டன.
தமிழகம் முழுக்க 1.80 லட்சம் மையங்களில் 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூசன் எடுக்கப்படுகிறது. இவா்களுக்கு மாதம் ரூ.1000 ஊதியம் வழங்கப்படுகிறது. மாலை நேர வகுப்பு மட்டுமல்லாமல், அரசு பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிலும், தன்னார்வலர்கள் உறுப்பினராக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்வி பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
Read Also: ஆர்டிஇ அட்மிஷன் 2023
இல்லம் தேடி கல்வி மைய கோவை மாவட்ட திட்ட ஆலோசகர் லெனின்பாரதி கூறுகையில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அறிவியல் கண்காட்சி, கற்பித்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றல், தனித்திறன் போட்டிகள் நடத்துதல், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு கல்வி சார் பணிகள், தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஊதியத்தை உயர்த்தி தர ஆவணம் செய்ய வேண்டும், என்றார்.