You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Tamil Nadu RTE Admission 2023 | ஆர்டிஇ அட்மிஷன் 2023 | ஆர்டிஇ மாணவர் சேர்க்கை 2023  

Typing exam apply Tamil 2023

Tamil Nadu RTE Admission 2023 | ஆர்டிஇ அட்மிஷன் 2023 | ஆர்டிஇ மாணவர் சேர்க்கை 2023

Tamil Nadu RTE Admission 2023

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009 பிரிவு 12 (1) ( C ) இதன்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாயப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி/ முதலாம் வகுப்பு) குறைந்த பட்சம் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அவ்வழிகாட்டுதல்களை பின்பற்றி 2013-14 முதல் 2023-2023ஆம் கல்வியாண்டு வரை மாணவர் சேர்க்கை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, கூடுதல் வழிகாட்டுதலும் திருத்திய கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்டிஇ அட்மிஷன் விதிமுறைகள்  

சட்டப்பிரிவு 12(1) (சி)இன் கீழ் சேர்க்கை வழங்க தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 விதி எண் 4 (1)ன்படி எல்கேஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் ஆகும்.

ஆர்டிஇ 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான சேர்க்கைக்கு தகுதியான இடங்களின் எண்ணிக்கை, 2022-2023ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி/ முதலாம் வகுப்பு) எமிஸ் இணையதளத்தின்படி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் ஐ கணக்கிட்டு சம்மந்தப்பட்ட பள்ளியின் எமிஸ் லாகின்னில் 18.4.2023 அன்று வெளியிடப்படும். சார்ந்த பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை அன்றைய தினமே 12(1) (சி) இன் கீழ் 25 சதவீதம் சேர்க்கைக்கான தகுதியான இடங்களை (இன்டேக்) பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். 18.4.2023 அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் வெளியிடப்படும்.

சட்டப்பிரிவு 12(1) (சி) இல் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 20.4.2023 முதல் 18.5.2023 வரை எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

20.4.2023 முதல் 18.5.2023 வரை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)/மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேற்காண் அலுவலகங்களில் இணைய வசதி, கணினி, சான்றுகள் பதிவேற்றம் தேவையான ஸ்கேன்னர் வசதி, கணிணி இயக்குபவர் ஆகியவற்றை 19.4.2023 அன்றே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Read Also: பள்ளி கல்லூரிகளுக்கு திடீர் விடுமுறை

அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், சார்ந்த பெற்றோர்களுக்கு ஒப்புகை சீட்டு (அரசாணை நிலை) எண் 60 பள்ளி கல்வித்துறை நாள் 1.4.2013 இல் உள்ள ஒப்புகை சீட்டில்) உடன் தவறாது வழங்கப்பட வேண்டும். இவ்விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது மேற்காண் அலுவலகங்களில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு மக்கள் இடையே சென்றைடையும் வகையில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளிலும் பள்ளியின் பிரதான நுழைவு வாயில் (மெயின் கேட்) பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் பள்ளி பெயர் பலகைக்கு அருகிலும், பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் 6 ‘ 10 அடி அளவில் கடந்த ஆண்டு வைக்கப்பட்டது போல் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிவிப்பு பலகை அவசியம் வைக்கப்பட வேண்டும்.

ஆர்டிஇ இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை செய்யப்படும் பள்ளிகள் முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண வசூல் ஒழுங்குமுறை) சட்டம் 2009ன்படி தனியார் பள்ளிகள், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயக்கப்படும் சட்டத்தை எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகள் 8 மற்றும் 38ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி போதிய உள்கட்டமைப்பு வசதிகள் பெற்றிருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009 ஐ நடைமுறைப்படுத்துதல் சார்ந்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பார்வை (2)ல் காணும் அரசாணையின்படி மாவட்ட தொடர்பு அலுவலர் என்பதால், மேற்படி அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.