Ilam Thedi Kalvi | இல்லம் தேடி கல்வி மதிப்பீட்டு அறிக்கை ஒப்படைப்பு
Ilam Thedi Kalvi
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல்பாடு மற்றும் மதிப்பீட்டு அறிக்கை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலிடம் அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் பள்ளிகள் சரிவர இயங்காத காரணத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையிலும், அவர்கள் எளிதில் பாடத்தை கற்கும் வகையிலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு அமல்படுத்தினார்.
Read Also: இல்லம் தேடி தன்னார்வலர்கள் சம்பளம்
இதன்மூலம் தன்னார்வலர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் இல்லம் தேடி கல்வி மையத்தின் மூலம் மாணவர்களுக்கு (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை) அடிப்படை கல்வியை கற்பித்து வந்தனர். இந்த திட்டம் கடந்தாண்டு முதல் செயல்பாட்டில் இருக்கிறது.
இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த இதுவரையிலான செயல்பாடுகள் குறித்து மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்ட குழு தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
இந்த அறிக்கையில் இல்லம் தேடி கல்வி மூலம் எத்தகைய செயல்பாடு தமிழகத்தில் நடைபெற்று உள்ளது. அதன் மதிப்பீடு குறித்த முழு விவரம் அடங்கியிருக்கும். இதனை பொறுத்து இல்லம் தேடி கல்வி திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.