இந்த பதிவில் பொது மாறுதல் கலந்தாய்வு Teachers' Transfer Counselling மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பங்கேற்கும் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பத்தினை எப்படி எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில்,
2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொறுமாறுதல் மற்றும் பதவி உயர்வு சார்பாக நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாறுதல் விண்ணப்பங்கள் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS ONLINE) பதிவேற்றம் எவ்வாறு செய்வது என்பது குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் பதிவு செய்யும் மாடல் வழிமுறையினை பின்பற்றி செயல்பாடுமாறும் மேலும் கீழ்கண்ட அறிவுரைகளின் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர்களுக்கான மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை (பள்ளி கல்வி)
- ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login IDஐ பயன்படுத்தி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் (இணைக்கப்பட்டுள்ள மாதிாி படிவங்களின் அடிப்படையில்) சமர்ப்பிக்க (SUBMIT) செய்ய வேண்டும்.
- அதன் தொடர்ச்சியாக சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை VIEW ெசய்து சரியாக அனைத்து விவரங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பதிவேட்டுடன் ஒப்பிட்டுதல்) செய்த பின்னர் தலைமை ஆசிரியர் Approval செய்ய வேண்டும்.
- மேற்படி பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
READ ALSO : TN Teacher Transfer Counselling Policy 2o21 Full Details
மாறுதல் சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள்
- மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது நீதிமன்றம் வழக்குகள் அல்லது புகார் இருப்பினும் அவா்களது விண்ணப்பம் ஏற்கப்பட வேண்டும்.
- மேற்படி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 9.1.2022 அன்று 5 பி.ப வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
- அனைத்து வகையான ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை (Eligible Vacancy Only) CEO Login IDஐ பயன்படுத்தி EMIS உள்ள படிவத்தில் 10.1.2022க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அதற்கு பிறகு காலிபணியிடங்களை பதிவேற்றம் செய்திட இயலாது.
- மேலும் காலிப்பணியிட விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டவுடன் பின்னர் சேர்க்கை / நீக்கம்/ திருத்தங்கள் போன்றவைகளுக்கு இடமளிக்காமல், செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
- காலிப்பணியிட விவரங்களை (அனைத்து வகை ஆசிரியர்கள்) பதிவேற்றம் செய்யும்போது நிரப்ப தகுந்த காலிப்பணியிடம்தானா என்பதை உறுதி செய்திடல் வேண்டும். மேலும் ஆசிரியரின்றி உபரி காலிபணியிடத்தினை (SURPLUS POST WITHOUT PERSON) எக்காரணம் கொண்டு காலபணியிடமாக கருத கூடாது.
- பணிநிரவல் (Deployment) கலந்தாய்வுக்கான கூடுதல் தேவயைுள்ள (Need Post) காலிப்பணியிடங்களையும் மேற்படி இணையதளத்திலயே உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் பதிவு செய்யும் முறை PDF