You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

எப்படி பள்ளி தரங்கள் குறித்து அறிவது - How To Gain School 10 Best Standards

How To Gain School Standards||

எப்படி பள்ளி தரங்கள் குறித்து அறிவது - How To Gain School Standards

பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு அறிமுகம்

பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு என்பது பள்ளியை மதிப்பீடு செய்வதற்கான ஒரு கருவி
ஆகும். இக்கருவி ஒருபள்ளியின் செயல் பகுதிகளைக் கண்டறிந்து, அப்பள்ளியிலுள்ள
குறைகளைக் களையவும், புதிய உத்திகளைக் கையாண்டு நிவர்த்தி செய்ய உதவுகிறது.
இம்மதிப்பீடானது, மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான கல்வி அலுவலர்கள்,
கல்வியாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரை உள்ளடக்கிப்
பங்கேற்பு அணுகுமுறையில் செயல்படுத்தப்படுகிறது.

Read also : பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?

To visit : மத்திய கல்வி அமைச்சகம்


பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டஅமைப்பு

• பள்ளிகளின் செயல்திறன்கள், மிகவும் முக்கியமான ஏழு செயற்களங்களைக் (Key Domains) கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.
• ஒவ்வொரு செயற்களத்தின் முக்கிய உட்கூறுகள் இன்றியமையாத தரங்கள் (Core Standards) என அழைக்கப்படுகின்றன. மேலும் பள்ளி மதிப்பீடு, இன்றியமையாத தரங்களை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது.
• ஒவ்வொரு பள்ளியின் தொகுப்பு மதிப்பீட்டு அறிக்கையை அனைவரும் தெரிந்துகொள்ள ""பள்ளி மதிப்பீட்டுப் பலகையில்"" (School Evaluation Dash Board) காட்சிப்படுத்துதல் இதன் சிறப்பம்சமாகும்.

How To Gain School Standards
How To Gain School Standards
How To Gain School Standards -2
How To Gain School Standards -2
மேற்கண்ட செயற்களங்கள் மற்றும் தரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியும் தம்மைத்தாமே
மதிப்பீடு செய்து முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்தல் இதன் முக்கிய அம்சமாகும்.

பள்ளிகள் மதிப்பீடு செய்யும் முறை


பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டு முறையில் அகமதிப்பீடு பள்ளி அங்கத்தினர்களாலும், புற மதிப்பீடு பொது நிருவாகக்குழு உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. அகமதிப்பீடு
பள்ளியின் பணியாளர்கள், பள்ளியின் ஒட்டுமொத்த செயல்திறனை அறியவும் பள்ளியின்
முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றும் காரணிகளைக் கண்டறியவும் உதவுகிறது.

புறமதிப்பீடு அகமதிப்பீட்டிற்கு இணையாகச் செய்யப்படுவதால், ஒரு பள்ளியின் முழுமையான மதிப்பீட்டிற்கு உறுதுணையாக அமைகிறது. பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இவை துணை புரிகின்றன.

இணையதளப் பக்கம்

பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டு தேசியத்திட்டத்திற்கெனத் தனியாக ஒரு இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
• பயனாளிகள் மதிப்பீடு சார்ந்த கருத்துகளை எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்.
• தேவைப்படும் தகவல்களை எளிதில் பெறலாம்.
• தங்களுடைய, பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தகவல்களையும், சுயமதிப்பீட்டு அறிக்கையினையும் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். புற மதிப்பீட்டாளர்களும் புறமதிப்பீடு அறிக்கையைப் பதிவேற்றம் செய்யலாம். அக மற்றும் புற மதிப்பீட்டின் தொகுக்கப்பட்ட பள்ளி மதிப்பீட்டு அறிக்கையைப் பெறலாம்.

பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு


• பள்ளியின் தரத்தை மதிப்பீடு செய்தலைப் பற்றிய விழிப்புணர்வு பெறுதல்.
• மதிப்பீடு செய்யும் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
• பள்ளி சிறந்த தரத்தினைப் பெறுவதற்கு ஒத்துழைத்தல்.
• இணையதளப் பக்கத்தில் பள்ளியின் தரமதிப்பீட்டை அறிந்து கொள்ளுதல்.