HCL Employment Training 2022 | ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் தொழிற்பயிற்சி
HCL Employment Training 2022
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Read Also: அரசு இலவச ஐஏஎஸ் ஐபிஎஸ் பயிற்சி
60 சதவீத மதிப்பெண்
அதன்படி 2021-2022ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அரசு பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு இந்த திட்டத்திற்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகிறது.
இந்த பயிற்சியின்போது, 7வது மாதம் முதல் மாணவர்களுக்கு ரூ 10 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
ஐடி துறையில் வேலை வாய்ப்பு
பணியில் சேர்ந்தவுடனே தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு 1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை (பணி நிலைக்கு ஏற்ப) தரப்படும். இதுதவிர ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணி புரிந்துகொண்டே உயர்கல்வியை தொடர முடியும். அதற்கான கல்வி கட்டணத்தின் ஒரு பகுதி ஹெச்சிஎல் றிறுவனமே வழங்கும். இந்த திட்டத்தின் தேர்வு முகாம் இன்று (அக்டோபர்) சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.
முன்பதிவு செய்ய வேண்டும்
விருப்பம் உள்ளவர்கள் ெஹச்சிஎல் நிறுவன வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்கள் சென்னை – 8807940948, மதுரை – 9788156509, திருநெல்வேலி – 9894152160, திருச்சி – 9444151303, கோவை, ஈரோடு, திருப்பூர் – 8903245731, 9865535909 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.