Group 4 Hall Ticket Download Direct Link tnpsc.gov.in
Group 4 Hall Ticket Download
டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சற்றுமுன் குரூப் 4 தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டி தேர்வுகள் மற்றும் நோ்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடந்தி வருகின்றனர்.
அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
READ ALSO THIS: டிஎன்பிஎஸ்சி நிலை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7,382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
Direct Link tnpsc.gov.in
விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட்
www.tnpsc.gov.in. www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.