Grama Sabha Meeting Agenda PDF 2023 | கிராம சபை கூட்டம் 2023
Grama Sabha Meeting Agenda PDF 2023
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், இயக்குனர் பொன்ைனயா அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
15.8.2023 சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். அரசாணையின்படி, குறைவெண்வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தின்று காலை 11 மணி அளவில் நடத்திட வேண்டும்.
Read Also: கிராம சபை கூட்டம் நிதி விவரம்
கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக்கூடாது. கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
கிராம சபை கூட்டம் நிகழ்ச்சிகளை பதிவு செய்திடும் பொருட்டு ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட GS - NIRNAY கைப்பேசி செயலியை பயன்படுத்தி நிகழ்நேர கிராமசபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்திட வேண்டும்.
மேலும், 15.8.2023 அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், மற்றும் கூட்டம் தொடர்பான அறிக்கையினை 18.8.2023க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Grama Sabha Meeting Agenda PDF 2023 Download - Click Here