Equal pay for Equal Work in Tamil | சம வேலைக்கு சம ஊதியம் கூட்டம்
Equal pay for Equal Work in Tamil
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1.6.2009க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 1.6.2009க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் வேண்டி பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் 27.12.2022 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்ககத்தின் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
Read Also: சம வேலைக்கு சம ஊதியம் சாத்தியமா
அதன்படி சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் 10.3.2023 அன்று கூட்டம் நடத் முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 10.3.2023 (இன்று) காலை முற்பகல் 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.