அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

சம வேலைக்கு சம ஊதியம் சாத்தியமா? | “Equal Pay For Equal Work” Not A Fundamental Right

சம வேலைக்கு சம ஊதியம் சாத்தியமா? | – “Equal Pay For Equal Work” Not A Fundamental Right – Supreme Court”

சம வேலைக்கு சம ஊதியம் என்பது அரசால் அடையப்பட வேண்டிய அரசியலமைப்பு இலக்காக இருந்தாலும், எந்த ஒரு ஊழியருக்கும் அடிப்படை உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 27ம் தேதி வழங்கிய ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம்

மேலும் அந்த தீர்ப்பில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, பதவி சமன்பாடு மற்றும் ஊதிய விகிதங்களை நிர்ணயிப்பது என்பது நிர்வாகத்தின் முதன்மை பணியே தவிர நீதித்துறையின் முக்கிய செயல்பாடு அல்ல என்று கூறியுள்ளது. எனவே, சாதாரணமாக நீதிமன்றங்கள் வேலை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடாது, இது பொதுவாக ஊதியக் குழுக்கள் போன்ற நிபுணர் அமைப்புகளுக்கு விடப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

READ ALSO: அரசு ஊழியர் வாாிசுகள் வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அரசாணை

சம வேலைக்கு சம ஊதியம் வழக்கு விவரம்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வன பாதுகாவலர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார் அதில், அவரது ஒய்வூதியத்தை ரூ.37,750 (HAG அளவுகோல் ரூ.75000- ரூ.80000-ல் 50%) ரூ.40 ஆயிரம் (50% உச்ச அளவுகோல் ரூ.80,000) ரூபாயாக மாற்றக்கோரி, அதாவது இந்திய வன சேவை (ஊதியம்) இரண்டாவது திருத்த விதிகள் 2008ன்படி விண்ணப்பித்திருந்தார், மத்திய அரசு இதனை நிராகரித்தது, என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும், அவர் இதை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்பாயத்தை அணுகியபோதும், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில், அவரது மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், மற்ற அதிகாரி போலவே, 2008 விதிகளின்படி அவர் ரூ.40 ஆயிரம் ஓய்வூதியம் பெற தகுதியானவர் என்று கூறியது.

சம வேலைக்கு சம ஊதியம் மேல்முறையீடு

இதை எதிர்த்து, மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, மேல்முறையீட்டு மனுவில், பஞ்சாப் நீதிமன்றம் 2017ம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டி, சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டை பயன்படுத்தி இந்த தீர்ப்பு வழங்கி, முற்றிலும் தவறாக வழிநடத்தியுள்ளது என தெரிவித்தது.

மேலும், இந்த தீர்ப்பில், ஊதிய விகிதங்கள் நிர்ணயம் செய்வது, பதவி சமன்பாடு செய்து நிர்வாகத்தின் முதன்மையான செயல்பாடு தவிர, நீதித்துறையின் பணி அல்ல. நீதிமன்றங்கள் பணிகள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடாது, இவைகள் ஊதியக்குழு போன்ற அமைப்புகள் பணியாகும். சம வேலைக்கு சம ஊதியம் என்பது அரசால் அடையப்பட வேண்டிய அரசியலமைப்பு இலக்காக இருந்தாலும், எந்தவொரு ஊழியருக்கும் அடிப்படை உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்தனர்.

சம வேலைக்கு சம ஊதியம் – இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

இந்த நிலையில், தமிழக அரசின் தொடக்க கல்வித்துறையில் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலை, சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதிய முரண்பாடு களைய வேண்டும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியம் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு 1.6.2009ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அநீதி இழைப்பதாக அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ம் தேதி வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியத்துடன் மற்ற படிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், கடந்த 2009 ஜூன் ஒன்றாம் தேதி முதல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்ற அளவில் மிக குறைவாகவே ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் இடைவெளிக்காக கிட்டதட்ட அவர்கள் ரூ.16,000 ஆயிரம் வரை குறைவாகவே ஜூன் 1ம் தேதி பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் 2009ம் ஆண்டு பின் பணி நியமனம் பெற்ற ஏறக்குறைய 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம வேலைக்கு சம ஊதியம் தீர்வு கிடைக்குமா?

இதை எதிர்த்து, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த பல ஆண்டுகளாக மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை செய்து வருகின்றனர். ஆனால், தீர்வு கிடைத்தபாடில்லை. கடந்த 2018ம் ஆண்டு, சென்னை டிபிஐ வளாகத்தில் நடந்த, தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அப்போதைய எதிர்கட்சி தலைவரும், இப்போதயை தமிழக முதல்வரும் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆசிரியர்களை போராட்டத்தின்போது நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது, சட்ட போராட்டங்கள் இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்து இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என சக ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும் தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

TO READ AND DOWNLOAD JUDGEMENT COPY

Related Articles

Latest Posts