தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும், காலநிலை கல்வி குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் காலநிலை உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்தார். இந்த மாநாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, காலநிலை மாற்றத்ைத எதிர்கொள்ளும் வகையில் நம்மை தகவமைத்து கொள்ளும் முயற்சியாக மாநாடு நடக்கிறது. வயநாடு நிலச்சரிவு, திருவண்ணாமலை மண்சரிவுக்கும் காலநிலை மாற்றத்தையே சொல்ல வேண்டும். காநிலை மாற்றத்தை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். Read Also: Eco club activities in tamil தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். உலக நாடுகள் பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தை கல்வி மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும். காலநிலைக்கு என கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்ட சேர்க்கை நடவடிக்ைக எடுக்கப்படும். வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் ரூ 4 லட்சம் நிவாரணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.