Eco Club Activities at Schools - தேசிய பசுமை படை / சுற்றுச்சூழல் மன்றம் செயல்பாடுகள்
Eco Club Activities at Schools
இந்த பதிவில் தேசிய பசுமை படை Eco Club / சுற்றுச்சூழல் மன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து காணலாம்
- தேசிய பசுமை படை அல்லது சுற்றுச்சூழல் மன்றம் இரண்டும் ஒரே வகையான அமைப்பே, பெயர்தான் வித்தியாசம்
- தேசிய பசுமை படைக்கு மத்திய அரசு நிதி உதவி – சுற்றுச்சூழல் மன்றத்திற்கு மாநில அரசு நிதி உதவி அளிக்கிறது
- தேசிய பசுமை படை அல்லது சுற்றுச்சூழல் மன்றங்களின் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 வரை மட்டுமே இருக்க வேண்டும்.
- 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு , 11ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே அங்கத்தினர்களாக சேர்க்க வேண்டும்.
- நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், இவற்றின் மூலம் புவி மாசு அடைவதை விழிப்புணர்ச்சி மூலமாக மக்களை தட்டி எழுப்ப ஐந்து குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு மேலாண்மையை ஒப்படைத்தல் வேண்டும்.
- ஒவ்வொரு குழுவிலும் 8 முதல் 10 மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்கலாம்.
- ஒவ்வொரு குழுவிற்கும் நீலக்குழு, பச்சைக்குழு, ஆரஞ்ச குழு, மஞ்சள் குழு, பழுப்புக் குழு என பெயரிடுதல் வேண்டும்
Eco Club - சுற்றுச்சூழல் மன்ற குழுக்கள் செயல்பாடுகள் என்ன?
Eco Club நீலக்குழு - நீர் மேலாண்மை
- நீர் மாசு அடைவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும், மக்கள் அடையும் துன்பங்களையும் மாணவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) உலக ஈர நாள் பாதுகாப்பு தினம் இயற்ககை வளங்கள் நாள் (அக்டோபர் 5) போன்ற நாட்களில் பேரணிகள், மனிதசங்கிலி, தெரு நாடகங்கள், துண்டு பிரசுரம், போன்றவை மூலமாக நீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- பள்ளியிலும், வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி மழை நீர் தேக்க தொட்டிகள் வெட்டச் செய்தல்
- நீரை கிக்கனமாக செலவிட விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- கழிப்பிடங்கள் போன்ற இடங்களில் உருவாகும் நீரை விணாக்காமல், மறுசூழற்சி செய்து பயன்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- நிலத்தடி நீரை, கழிவு நீர் கலக்காமல் பாதுகாத்தல்
- தோல் பதனீடு, ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகளை ஆறுகள் மூலம் வெளியேற்றி நிலத்தடி நீர் பாழடைவது விழிப்பணர்வு மூலம் தடுத்தல்
Eco Club பச்சைக்குழு – நில மேலாண்மை
- நிலம் மாசடைந்து, நிலத்தின் தன்மை கெட்டு, மண் அரிப்பு, மண்ணின் தரம் குன்றுதல், செயற்கை விவசாய முறைகளின் பாதிப்பால் மண்வளம் கெட்டு, நாட்டு மக்கள் பல வகைகளில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதை விழிப்புணர்வு மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தல்
- பூமிதினம், உலக வன நாள், வன மகோத்சவம் போன்ற நாட்களில் பேரணிகள், மனித சங்கிலி, தெரு நாடகங்கள், வீடு வீடாய் சென்று பிரசாரம் செய்தல், துண்டு பிரசாரம் போன்றவைகள் மூலமாக நிலத்தை மாசு அடையாமல் காப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தல்
- வீடுகள், பள்ளிகள், கோயில்கள், அரசு நிலங்கள், தரிசு - புறம்போக்கு நிலங்களில் மரங்கள் நடுதல் பணி.
- பள்ளிகளில் மரக்கன்று உற்பத்தி செய்தல்
- விவசாயிகளுக்கு மரக்கன்று உற்பத்தி செய்தல்
- விவசாயிகளுக்கு செயற்கை உரங்களை விளக்குதல்
- இயற்கை உரங்களாகிய மண்புழு உரம், பசுந்தாள் உரம், பசுங்காவ்யம், இலை தழை உரங்கள் ஆகியவற்றை முன்மாதிாியாக உற்பத்தி செய்து காட்டல்
- மூலிகை பண்ணை, தோட்டப்பண்ணை மாதிரி அமைத்தல்
Eco Club ஆரஞ்சு குழு – காற்று மேலாண்மை
- காற்று மாசு அடைவதால் மக்கள் அடையும் சுகக்கேடுகளையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் மாணவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- சர்வதேச ஓசோன் தினம், இயற்கை பாதுகாப்பு தினம், தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் போன்ற நாட்களில் பேரணிகள், மனிதசங்கிலி, தெருநாடகங்கள், துண்டு பிரசுரங்கள் போன்றவை மூலமாக காற்று மாசு அடைவது குறித்தும், அதுகுறித்து மக்கள் அடையும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- வாகனங்கள், தொழிற்சாலைகளில் உண்டாகும் புகையினால், சுற்றுச்சூழல் கெடுதலை, எப்படி பராமரிப்பு செய்வது குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல்
- காற்று மாசடைவதால், வெப்பமடைவதால் ஓசோன் ஓட்டை, துருவப் பிரதேசத்தில் பனி ஆறு பெருகுதல், கடல் மட்டம் உயருதல் கடற்கரை நகரங்கள் அழிவு- சுனாமி – நிலநடுக்கம் – எரிமலை கொந்தளிப்பு – போன்றவற்றை விளக்கி காற்று மாசடையாத பணிகளை மேற்கொள்ள – மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- போகி, தீபாவளி, பண்டிகை மற்றைய காலங்களில் எரித்தலை குறைத்தல்
- வாகனங்களை குறைவாக பயன்படுத்துதல்
Eco Club மஞ்சள் குழு – ஆற்றல் மேலாண்மை குழு
- மனித வள மேலாண்மை இயற்கை வள மேலாண்மையை பெருக்கி சுற்றுப்புற சூழல் வளத்தை காத்து நாட்டு மக்கள் நலம்பெற விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- உலக ஆற்றல் தினம், இயற்கை பாதுகாப்பு தினம், தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள் போன்ற நாட்களில் தவறால் ஆற்றல் மேலாண்மையால் உலகத்திற்கு ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணிகள், மனிதசங்கிலி, தெருநாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- அனல்மின் நிலையங்களில் நிலக்கரி உபயோகித்து கார்பன் வாயுவினால் ஆகாயம் கெட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு – சூர்ய ஆற்றல் சக்தி காற்றாலைகள் சக்தி மூலமாக கார்பனை குறைத்தல்
- நாட்டு மக்கள் குண்டு பல்புகள் உபயோகித்து குறைத்து சுருள் பல்புகள் உபயோகம் செய்வதன் மூலம் வெப்ப அளவை குறைத்தல்
- தெருவீதிகளிலும், வீடுகளிலும் அலுவலகங்களிலும் வீணாக மின்விளக்குகள் எரித்தலை குறைத்தல் மின்விசிறிகள் காற்று குளிர்விப்பான், குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி பயன்பாட்டை குறைத்தல், மற்றும் சுற்றுச்சூழல் நட்பு சாதனங்களை பயன்படுத்துதல்
- சூர்ய அடுப்பு, எரிசான வாயு பயன்பாடு விழிப்புணர்வு
Eco Club பழுப்புக்குழு - கழிவு மேலாண்மை
- குப்பை கூளங்களிலும், பிளாஸ்டிக் உபயோகத்தால் சுற்றுச்சூழலும் பாதிப்படைந்து மக்கள் அடையும், கஷ்டங்களை விழிப்புணர்வு மூலம் மக்கள் உணரச் செய்தல்
- தேசிய மாசு கட்டுப்பாடு தினம், உலக சுற்றுச்சூழல் தினம், உலக பாலைவன தடுப்பு நாள் போன்ற தினங்களில் பேரணிகள், மனிதசங்கிலி, தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- பள்ளிகளிலும், வீடுகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக கையாளும் முறைகளை உருவாக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்தல்
- பாலிதின் குப்பைகளை தனியாக பிரித்து எடுத்து அதனை விலைக்கு விற்று பயனபெற செய்தல்
- பள்ளிகளில் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி பசுந்தாள் உரம் செய்வித்து விவசாயிகளுக்கு முன்மாதிரியாக இருக்கச் செய்தல்
- பாலிதின் உபயோகத்தால் ஏற்படும் சுககேடுகளை விளக்கி பாலிதின் உபயோகத்தை குறைக்க விழிப்புணர்ச்சி செயல்பாடுகள்
- கடற்கரையிலும், ஆறுகளிலும் பாலிதின் இல்லா குப்பை இல்லா செயல்பாடுகளை செய்தல்