Ennum Ezhuthum Training|எண்ணும் எழுத்தும் பயிற்சி எப்போது?
Ennum Ezhuthum Training எண்ணும் எழுத்தும் இயக்கம்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை போக்க எண்ணும் எழுத்தும் என்ற மாபெரும் இயக்கம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
READ ALSO THIS: சம வேலைக்கு சம ஊதியம் சாத்தியமா?
எண்ணும் எழுத்தும் நோக்கம்
எண்ணும் எழுத்தும் நோக்கம் என்பது 2025 கல்வியாண்டிற்குள் 1 முதல் 3ஆம் வகுப்பு பயிலும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெற வேண்டும் என்ற தொலை நோக்கினை கொண்டுள்ளது. மேலும் இவ்வியக்கம் 2022-2023ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
எண்ணும் எழுத்தும் கையேடு
எண்ணும் எழுத்தும் செயல்முறைப்படுத்திட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப்பாடத்திற்கான பாடப்பொருள் உருவாக்கப்பணி மற்றும் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர்களுக்கான நிலைவாரியான பாடப்புத்தகம் வடிவமைத்தல் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு பணிகள் அனைத்து வடிவமைக்கப்பட்டு வருகிறது.
எண்ணும் எழுத்தும் பயிற்சி (மாநில அளவில்)
இதனை தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சிகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியினை உண்டு உறைவிட பயிற்சியாக மதுரை மாவட்டம், பில்லர் ஹாலில் மே 23 அன்று முதல் மே 28ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தகுந்த ஆர்வமிக்க மற்றும் கற்றல் கற்பித்தலில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் டயட் கல்வியாளர்களை பயிற்சியில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக பணி விடுப்பு செய்யுமாறு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எண்ணும் எழுத்தும் பயிற்சி (மாவட்ட அளவில்)
மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி வரும் ஜூன் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.