EMIS Latest News | எமிஸ் பணி முக்கிய உத்தரவு
EMIS Latest News
கல்வித்துறை இணை இயக்குனர் (தொழிற்கல்வி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இன்று அனுப்பிய சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது,
அனைத்து வகை அரசு/அரசு உதவி/பகுதி நிதி உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை மையத்திடமிருந்து (EMIS) பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
Read Also: கலை திருவிழா கடுப்பாகும் ஆசிரியர்கள்
இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதால் முதன்மை கல்வி அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMIS இல் 16.12.2022-க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். இனி வருங்காலங்களில் முதன்மை கல்வி அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த நலத்திட்டங்களுக்கான தேவை பட்டியலாக(Indent) எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.