முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் பள்ளி கல்லூரிகளில் உறுதிமொழி எடுக்க உத்தரவு

0
148
B.E Part Time admission 2022-23
B.E Part Time admission 2022-23

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் பள்ளி கல்லூரிகளில் உறுதிமொழி எடுக்க உத்தரவு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஜூன் 15ம் தேதி முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் முதியோர் எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் உறுதிமொழி 15.06.2022 (புதன்கிழமை) அன்று முற்பகல் 11 மணிக்கு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

READ THIS: 5 வயது குழந்தை இலவச பயணம்

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் உறுதிமொழி

“இந்திய குடிமகன் / குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்கமாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கபடுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதியளிக்கிறேன்.”

இவ்வாறு உறுதிமொழி எடுக்க வேண்டும். உறுதிமொழி எடுப்பதோடு மட்டுமின்றி, பொதுவாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here