அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

அரசு தேர்வுகள் இயக்ககம் செயல்பாடுகள் | Role of Directorate of government examination Here

அரசு தேர்வுகள் இயக்ககம் செயல்பாடுகள் | Role of Directorate of government examination Here

அரசு தேர்வுகள் இயக்ககம் செயல்பாடுகள் – நோக்கம்

தமிழக பள்ளி கல்வித்துறையின் முதுகெலும்பாக செயல்படுவது அரசு தேர்வுகள் இயக்ககம். பள்ளியில் படிக்கும் 10, 11 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் அடைவுகளை துல்லியமாக அளவீடு செய்து பொது தேர்வுகளை நடத்தி மிக முக்கிய நிரந்தர ஆவணமான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர இந்த அரசு தேர்வுகள் இயக்கம் வழிவகை செய்கிறது.

அரசு தேர்வுகள் இயக்ககம் என்னென்ன தேர்வுகள் நடத்துகிறது

பொது தேர்வு மட்டுமின்றி, அரசுத்தேர்வுகள் தொடக்க கல்வி பட்டய தேர்வு, மாணவர்கள் உதவித்தொகைக்கான தேர்வுகள், பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும், வினாத்தாள் தயாரித்து வழங்குதல், தேர்வுகளை முறையாக நடத்துதல், விடைத்தாள் மதிப்பீடு செய்த பிறகு, தேர்வு முடிவுகளை வெளியிடுதல், மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட தேர்வு பணிகளை செய்து வருகிறது.

அரசு தேர்வு இயக்ககத்தின் கீழ் 7 மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மண்டலத்திற்கும் உட்பட்ட தேர்வு மையங்களுக்கு எழுதுபொருள், தேர்விற்கானம முன்பணம் விநியோகம் செய்வது, தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்குவது உள்ளிட்ட முக்கிய பணிகள் இந்த மண்டல அலுவலகங்களில் நடக்கிறது.

அரசு தேர்வுகள் இயக்ககம் செயல்பாடுகள்
அரசு தேர்வுகள் இயக்ககம் செயல்பாடுகள்

READ ALSO: அரசு தேர்வுகள் இயக்ககம் 11, 12ம் வகுப்பு அகமதிப்பீடு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

அரசாணை எண் 26:

பள்ளி கல்விததுறை கடந்த 16.02.2021ன் படி இடைநிலை கல்வி குழுமம் மற்றும் மேல்நிலை தேர்வுகள் குழுமம் இரண்டும் உள்ளடக்கிய மாநில பள்ளிகள் தேர்வு வாரியம் (State Board of School Examinations) அமைப்பு ஏற்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி

மேல்நிலை கல்வி (Higher Secondary Education) இடைநிலை கல்வி (Secondary Education) ஆசிரியர் கல்வி (Teacher Education) உள்ளிட்ட தேர்வுகளுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்குவதில் விதிமுறை வகுக்க வேண்டும்.

  • தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள் அமைத்தல்
  • தேர்வுகளுக்கான ஒழுங்கு விதிமுறை வகுத்தல்
  • ஒழுங்கீனச் செயல் வழக்குகளை தீர்வு செய்தல் தொடர்பான விதிகள் வகுத்தல்
  • தேர்வு பாடங்கள் தொடர்பான கால அளவு தீர்மானிப்பது
  • சான்றிதழ்கள் வடிவமைப்பது
  • தேர்வுகள் நடத்துவதற்கான தேர்வு திட்டத்தினை வடிவமைப்பு செய்வது
  • இந்த குழுவிற்கு பதவி வழி உறுப்பினர்கள், பல்கலைக்கழக பிரதிநிதிகள், நியமன உறுப்பினர்கள், பொது உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு வாரியம் புதுப்பிக்கப்பட்டு, உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.

Related Articles

1 COMMENT

Comments are closed.

Latest Posts