கோவிட்19 பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற கல்வித்துறை உத்தரவு
கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகள்| ஆசிரியர்கள் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்| சுகாதாரத்துறை| பள்ளி கல்வி ஆணையர்| பள்ளி கல்வி செய்தி
பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கோவிட் 19
2022-2023ஆம் கல்வியாண்டில் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை பணிகள் மற்றும் உயர் கல்வி பயில்வதற்கான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் பண்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களும் சசுாதார செயலாளர் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு கீழ் காணும் வழிமுறைகளை பள்ளிகளில் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. மேலும், முதன்மை கல்வி அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுரங்க போட்டி பள்ளிகளில் நடத்த கல்வித்துறை உத்தரவு
- தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோவிட் 19 பெருந்தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளி வளாகத்தில் நுழையும்போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்பமானி கருவி மூலம் பரிசோதித்த பின்னர் வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும். எவருக்கேனும் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால் அன்னார் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
- பள்ளி வளாகத்தினுள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய அணிந்திருந்தல் வேண்டும்.
- அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்தினுள் சோப், ஹேண்ட் வாஷ், முதலியவை இருப்பதையும் தலைமை ஆசிரியர் உறுதி செய்தல் வேண்டும்
- தனிமனித மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- வகுப்பறையில் உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்
- அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.