Coimbatore HM Sexual Harassment | கோவை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்
Coimbatore HM Sexual Harassment
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொ) ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறினர். ஆத்திரம் அடைந்த பெற்றோர் சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெகமம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற நிலையில், புகார் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
Read Also: கோவை முதன்மை கல்வி அலுவலராக உஷா பதவியேற்பு
இதற்கிடையில், கோவை கல்வி அதிகாரிகள் புகாருக்கு ஆளான ஆசிரியரை செவ்வாய் கிழமையன்று அருகில் உள்ள வேறு ஒரு பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.