பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கான தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, நடைபெறவிருக்கும் மார்ச் / ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 22 முதல் ஜனவரி 28ம் தேதி வரை நடத்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Read also: பத்தாம் வகுப்பு தமிழ் கையேடு பதிவிறக்கம் செய்க அதன்படி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் செய்முறை தேர்வுக்கான வெற்று விடைத்தாள்களை பிப்ரவரி 17ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும். மாணவர்கள் விைடத்தாள், மாணவர்கள் விவரங்கள் மார்ச 4ம் தேதிக்குள் உதவி இயக்குனர் தேர்வுத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மதிப்பெண்கள் இணையத்தில் பதிவேற்றும் பணி பிப்ரவாி 28ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதிக்குள் முடித்திட வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.