You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு மே 25ல் நடைபெறுகிறது

Civil service preliminary exam held on May 25

சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு மே 25ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு பட்டதாாிகள் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்படுகின்றன. இதற்கான முதல்நிலை, முதன்மை நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்ெபண்கள் வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி நடப்பாண்டு 979 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி தற்போது வௌியிட்டு உள்ளது. 

Read Also: யுபிஎஸ்சி தேர்வு என்றால் என்ன?

இதையடுத்து முதல்நிலை தேர்வு மே 25ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் https://upsc.gov.in/  எனும் வலைதளத்தில் பிப்ரவரி 11ம் தேதி விண்ணப்பிக்கலாம். விண்ணபங்கள் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்ரவரி 12 முதுலு் 18ம் தேதி வரை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உட்பட கூடுதல் தகவல்களை மேற்கொண்ட வலைதளத்தில் காணலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.