You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

CIT College Exhibition News | சிஐடி கல்லூரி அறிவியல் கண்காட்சி

CIT College Exhibition News

CIT College Exhibition News | சிஐடி கல்லூரி அறிவியல் கண்காட்சி

CIT College Exhibition News

கோவை தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட குழு , இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் அறிவியல் பரப்புகை திட்டத்தின் கீழ் இயங்கும் கோவை கணித வாணி கணித அறிவியல் கழகம் மற்றும் லயன்ஸ் கிளப் கோவை டைடெல் சிட்டி ஆகியவை இணைந்து சமூகத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி 2023 என்ற தலைப்பில் கோவை தொழில் நுட்பக் கல்லூரியில் 28.01.2023 அன்று நடத்தியது.

Read Also: அறிவியல் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்

இதில் தமிழகத்தில் 4 மாவட்டத்திலிருந்து 200 க்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட எரிசக்தி ,இயற்பியல் மற்றும் உயிரியல் சார்ந்த அறிவியல் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படுத்தினர். மரபு சாரா கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் கணித வாணி கணித அறிவியல் கழக நிர்வாகிகள் பேராசிரியர் லெனின் பாரதி திரு இளங்கோ மற்றும் திருமதி வசுந்தரா உள்ளிட்டோர் அடங்கிய பேராசிரியர் குழு மதிப்பீடு செய்து சிறந்த அறிவியல் மாதிரிகளை தேர்ந்தெடுத்தனர்.

இதில் சிறப்புவிருந்தினராக லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் வழக்கறிஞர் திரு ஜெயசேகரன், திரு ராம்குமார் மற்றும் திரு முத்தழகு ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர் . கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கோவை தொழில் நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் முனைவர் பிரபாகரன், முனைவர் நந்தகுமார் ,முனைவர் சுரேஷ் ,முனைவர் ஹேமா மற்றும் முனைவர் ஜெயந்திமணி ஆகியோர் செய்திருந்தனர்.ரோபோ மாதிரியை உருவாக்கியதற்காக சிறந்த அறிவியல் மாதிரி விருது சேரன்மாநகர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கிடைத்தது.