Science Competition at Coimbatore | அறிவியல் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
Science Competition at Coimbatore
மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் இந்திய அணுமின் கழகம் (Nuclear Power Corporation of India Limited) மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் (Tamilnadu Science and Technology Centre) கீழ் இயங்கும் கோயமுத்தூர் மண்டல அறிவியல் மையம் இணைந்து இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு அமுதப் பெருவிழா நிறைவை சிறப்பிக்கும் வகையில் Iconic week celebration இன்று முதல் ஆக.26 வரை கொண்டாடப்பட உள்ளது.
தமிழ்மொழி திறனறித் தேர்வு ரூ.1500 பெறுவது எப்படி?
அதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் மண்டல அறிவியல் மையத்தில் இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான கட்டுரை, ஓவியம், வினாடி வினா ஆகிய போட்டிகள் “அணுவின் சக்தி அமைதிக்கே “அணு ஆற்றலின் பயன்கள்” ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள 60 பள்ளிகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளை மாவட்ட அறிவியல் அலுவலர் லெனின்தமிழ்கோவன் அவர்கள் துவக்கி வைத்தார். எஸ்.என்.எம்.வி அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேரா.க.லெனின்பாரதி, மண்டல அறிவியல் மைய கருத்தாளர்கள் பி.மகேந்திரன், பி.தங்கதுரை, எம்.அன்பானந்தம்,என்.பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை இந்திய அரசின் அணுசக்தி துறையின் விஞ்ஞானி அவர்கள் தலைமையில் ஆகஸ்டு 26ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.