முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது | ரூ.1 லட்சம் பரிசு |Chief Ministers State Sports Award
Table of Contents
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது தகுதி என்ன?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள், விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் போட்டிகள் நடத்தும் ஒரு நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோருக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.
To Read This | SDAT Hostel Admission 2022
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசு தொகை
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் விளையாட்டு விருது பரிசாக ரூ. ஒரு லட்சம், தங்க பதக்கம், மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது தகுதிகள் என்ன?
தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக வசித்து வரும், தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்துகொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, இரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணபிக்க தகுதி பெறுபவர். இரண்டாவது முறையாக, ஒரு நபருக்கு இந்த விருது வழங்கப்படமாட்டாது. ஒருவர் காலமாகும் பட்சத்திலும் இவ்விருது வழங்கப்படும். விருதுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இந்த விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும். இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்படுவர்கள் மேற்காணும் விதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
விளையாட்டு போட்டிகளின் பட்டியல்கள் என்னெ்ன?
ஒலிக்பிக் போட்டி, சர்வதேச ஒலிம்பிக்குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் போட்டிகள், உலக வாகையார் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் ஆண்டுதோறும்) ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், தெற்காசிய விளையாட்டு போட்டிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் தேசிய வாகையர் போட்டிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். அழைப்பு போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது விளையாட்டு வீரர்கள் தகுதி
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் பதக்கமும், அதாவது உலக கோப்பை, தெற்காசிய விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்மந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும், மற்றும் குழுப்போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றிருத்தல் வேண்டும். இந்த போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். தற்போது 2021-2022 ஆம் ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளான 1.4.2018 முதல் 31.3.2021 முடிய பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளின் சாதனை கருத்தில் கொள்ளப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம், மாவட்ட விளையாட்டு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், முதன்மை உடற்கல்வி ஆய்வர் மூலமாகவும் விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனா், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கும் முறை
விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடை அளித்தவர்), ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகிேயார்க்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கான விண்ணப்ப படிவம் மற்றம் விரிவான வழிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 10.06.2022க்குள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை – 3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |