SDAT Hostel Admission 2022 | மாணவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் இரா ஆனந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
Table of Contents
SDAT Hostel Admission 2022 | விளையாட்டு விடுதி
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகளை புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி
Also Read This | தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நோக்கம்
மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர்களாக விளங்குவதற்கு 7ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு மற்றும் 11ம் ஆம் வகுப்பு சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 22.03.2022 (31 மாவட்டத்திற்கும்) அன்றும் 24.3.2022 அன்று ஆறு மாவட்டத்திற்கும் (செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, மற்றும் திருப்பூர்) 25.03.2022 அன்று இராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் நடைபெற உள்ளது.

மாணவர்கள்
தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்குவாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை.
மாணவியர்கள்
தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்ச்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜிடோ மற்றும் ஸ்குவாஷ்
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தினை பூர்த்தி செய்திட கேட்டு கொள்ளப்படுகிறது. படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 22.03.2022 மாலை 4 மணி. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |