You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Chief Minister Talent Search Exam | முதலமைச்சர் திறனறி தேர்வு திட்டம்

TN CM Latest News in Tamil

Chief Minister Talent Search Exam | முதலமைச்சர் திறனறி தேர்வு திட்டம்

Chief Minister Talent Search Exam

சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த அனைவரும் சென்னை ஐஐடி என்ற நிகழ்ச்சியில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது, அப்படியே

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இப்பொழுது எல்லாருக்கும் எல்லாம் என்ற ஒரு உன்னதமான நோக்கம் கொண்ட திராவிடம் மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதன் பொருட்டும் எவருக்கும் எந்த வாய்ப்பும் தடுக்கப்படக்கூடாது. அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் திறந்திருக்க வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய நெறிமுறையாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

அதனால் தான் கல்வித்துறையில் அதிகமான கவனத்தை நாம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். கல்வி என்பது அனைவருக்கும் சமமாக கிடைத்தால் அடுத்தடுத்து அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு சமமாக பெற்றிட முடியும். ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுடைய திறன் வளர்ச்சிக்காகவும் பள்ளிகளில் தரமான கற்றல் சூழலை உருவாக்கக்கூடிய வகையிலும், பல்வேறு வகையில் பல முன்னேற்பாடு செயல்பாடுகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

Chief Minister Talent Search Exam

அனைத்து குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசு பள்ளிகள் இன்று மாறி வருகிறது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி என்பதை இலக்காக கொண்டு இருக்கிறது நம்முடைய அரசு. மாணவர்களுக்கு தேவையான அறிவு திறனை வளர்த்துக் கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கடுத்து கட்டதான் இந்த விழாவும் அமைந்திருக்கிறது.

இந்தியாவில் ஒரு தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மையான கல்வி நிறுவனத்தின் பெயரை பெற்றது இந்த ஐஐடி சென்னை. ஐஐடி சென்னையில் சேர்ந்து உயர் கல்வி பயில்வது தம் வாழ்நாள் இலட்சியமாக நினைத்து லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய கற்றல் திறன்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நம்முடைய அரசியல் பள்ளி மாணவிகளுக்கு உதவக் கூடிய வகையில் அவர்களை எல்லாம் ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் அறிவியல் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய வகையிலும் நம் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து உருவாக்கி இருக்கக்கூடிய திட்டமே அனைவருக்கும் ஐஐடி-எம். அரசு பள்ளிகளை பெறக்கூடிய மாணவர்கள் நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்கு தயார்படுத்துவது இந்த திட்டத்தினுடைய நோக்கமாக அமைந்திருக்கிறது.

எனது கனவு திட்டமான  நான் முதல்வன் திட்டத்தை தொடர்ச்சியை அதனுடைய முன்னெடுப்பு தான் இது. நான் முதலமைச்சர் திட்டத்தைப் போலவே இந்த திட்டமும் பயனுள்ளதாக அமையப்போகிறது. அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தின் முதல் கட்டமாக ஐஐடி சென்னையில் நான்காண்டு படிப்பாக வழங்கப்படும். பி எஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பில் சேர தமிழ்நாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 மாணவர்கள் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

Read Also: Puthumai Pen Thittam

வானவில் மன்றம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, என்னும் எழுத்தும் இயக்கம், அரசு மேல்நிலைப்பள்ளிகள் திறன்மிகு வகுப்பறைகள் புதுமைப்பெண் திட்டம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கல்வி வளர்ச்சிக்காக நாம் செய்து வருகிறோம்.

இவை அனைத்தும் சேர்ந்து கல்வித் துறையில் மாபெரும் அறிவு புரட்சிக்கு வித்திட்டு இருக்கிறது. நமது அரசு கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்க கூடிய செயல்படுத்திக் கொண்டிருக்க கூடிய திட்டங்கள் மூலமாக நீங்கள் அறியலாம்.

முதலமைச்சர் திறனறி தேர்வு திட்டம்

இது போன்ற திட்டங்களை தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம் என்ற மிக முக்கியமான புதிய திட்டத்திற்கான அறிவிப்பினை இந்த நிகழ்வில் வெளியிட்டு அறிமுகம் செய்து தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்களுடைய கல்வியை உயர்கல்வியை தொய்வின்றி தொடர்வதற்கும் உதவி செய்வதே இந்த திட்டத்தினுடைய நோக்கம்.

இந்த திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்பு பயிலும் 500 மாணவர்கள் 500 மாணவிகள் ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுபவர். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் அனைவருக்கும் சென்னை ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களோடு தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, வழிகாட்டுதல் வழங்கப்படும்.

அவர்கள் 12ஆம் வகுப்பு நிறைவு செய்யக்கூடிய வகையில் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுடைய இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை தொடரும்போதும், ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் ரூபாய் உதவி தொகையும் பெறுவர் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எதன் பொருட்டும் ஒருவரது வாய்ப்பு பறிபோகக்கூடாது என்று நான் தொடக்கத்திலே சொன்னேன். அரசு பள்ளியில் படிக்கக்கூடிய நமக்கு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையான தனிப்பயிற்சி கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் யாருக்கும் இருக்கக் கூடாது. அதற்காகத்தான் இந்த திட்டம். சமூக அமைப்போ, பொருளாதார நிலைமையோ அவரது வளர்ச்சியை தடுக்கக்கூடாது. பெண் என்பதற்காக பள்ளிப்படிப்போடு அவர்களது கல்வி நிலையை சுருக்கப்படக்கூடாது. இத்தக சமூகநீதிகளை களைவது தான் சமூக நீதி. இட ஒதுக்கீடாக இருந்தாலும், கல்வி உதவித் தொகைகளாக இருந்தாலும் தரப்படுவதற்கு இதுதான் காரணம். இது போன்ற சமூக நல திட்டங்களின் காரணமாகத்தான், சமூகமும் வளர்ந்துள்ளது, நாடும் வளர்ந்துள்ளது.

சமூகத்தின் அனைத்து தரப்பின் அறிவு சக்தியும் படைத்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு கல்வி, அறிவியல் பகுத்தறிவு கல்வி வேண்டும். கல்வி என்பது வேலைக்கு தகுதிப்படுத்துவதாக மட்டும் இருக்கக்கூடாது, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உள்ள மனிதர்களாக தகுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் அறிவாற்றலை மட்டுமல்ல மன ஆற்றலையும் உருவாக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மாணவர் திறனறி தேர்வு திட்டத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் இந்த நேரத்திலே கேட்டுக் கொண்டு இந்த சிறப்பான நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்க கூடிய ஒரு நல்வாழ்வு பெற்றமைக்கு மீண்டும் என்னுடைய நன்றியை வணக்கத்தை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.