Chennai IIT Professor Arrest | செல்போனில் படம் பிடித்த பேராசிரியர் கைது
Chennai IIT Professor Arrest
சென்னை, ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல்போனை வைத்து படம் பிடித்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ஏரோ ஸ்பேஸ் துறைக்கு சொந்தமான ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையயை பயன்படுத்த சென்ற மாணவி சுவர் இடுக்கில் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
Read Also: கோவை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்
இதனையடுத்து மாணவி கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கிருந்த உதவி பேராசிரியர் சுபம் பானர்ஜி என்பரை சக அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
கழிவறையை மாணவிகள் பயன்படுத்தும்போது அதனை செல்போன் மூலம் படம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.