முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் பள்ளி கல்வித்துறை உத்தரவு
முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, நிர்வாக நலன் கருதி, பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை இடமாற்றம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
Read Also This: கல்லூரி திறப்பு எப்போது உயர்கல்வித்துறை அறிக்கை
அதன்படி, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், சத்தியமூர்த்தி, நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பத்தூர், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், ஈரோடு முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கடலூர் முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடலூர் முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் முதன்மை கல்வி அலுவலர், திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை முதன்மை கல்வி அலுவலர் கீதா, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.