CEO Transfer News 2022 | முதன்மை கல்வி அலுவலர்கள் திடீர் மாற்றம்
CEO Transfer News 2022
பள்ளி கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாறுதல் அளிக்கப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது பணியிட பொறுப்புகளை, மாவட்டத்தில் உள்ள மூத்த மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு உடன் புதிய பணியிடத்தில் சேருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பணிவிடுக்கப்படும் அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரிந்த அலுவலர்கள் சார்பாக மந்தன அறிக்கைகள் எழுத வேண்டியிருப்பின், அதனை முடித்துவிட்டு புதிய பணியிடத்தில் சேருமாறும் பணிவிடுப்பு மற்றும் பணியேற்பு அறிக்கையினை அனுப்பி வைக்கமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read: SMC Resolution in Grama Sabha Meeting
தொடக்க கல்வி இயக்ககம், துணை இயக்குனர் (சட்டம்), ஆஞ்சலோ இருதயசாமி, செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாறுதல் பெற்றார். முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று, சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுளார். விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர், திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா, தஞ்சாவூர் மகாராஜா சரோபோஜி சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலாக பதவி உயர்வு பெற்றுளார். புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சி சண்முகநாதன் ,தொடக்க கல்வி இயக்ககத்தின் (சட்டம்) துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுளார். வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் தனியார் பள்ளி இயக்ககத்தின் துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு, எஸ்சிஇஆர்டி துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவ்வாறு அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.