Also Read: SMC Resolution in Grama Sabha Meeting
தொடக்க கல்வி இயக்ககம், துணை இயக்குனர் (சட்டம்), ஆஞ்சலோ இருதயசாமி, செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாறுதல் பெற்றார். முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று, சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுளார். விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர், திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா, தஞ்சாவூர் மகாராஜா சரோபோஜி சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலாக பதவி உயர்வு பெற்றுளார். புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சி சண்முகநாதன் ,தொடக்க கல்வி இயக்ககத்தின் (சட்டம்) துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுளார். வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் தனியார் பள்ளி இயக்ககத்தின் துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு, எஸ்சிஇஆர்டி துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவ்வாறு அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.