Caste Discrimination Issue at government Schools | அரசு பள்ளியில் சாதிய வன்கொடுமை?
Caste Discrimination Issue at government Schools
சிவகாசி அருகே பேராபட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் சாதிய வன்கொடுமை நடப்பதாக மாணவர்கள், கலெக்டா் மற்றும் முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள், ஆசிரியரிகளிடம் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி விசாரணை நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேராபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் பட்டியல் இன மாணவர்கள் காலணி அணிந்து வரக்கூடாது, பள்ளியின் வாசலுக்கு வெளியே நின்று சாப்பிட வேண்டும். இரண்டு கி.மீ தொலைவு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டும், குப்பை அள்ள வேண்டும் உள்ளிட்ட பணிகள் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது.
Read Also: நாட்டு நலப்பணித்திட்டம் என்றால் என்ன?
மேலும் பள்ளி சார்பாக சுற்றுச்சூழல் மன்றம் நடந்தது. இதில் 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை மட்டுமே அழைத்து சென்றுள்ளனர். 10ம் வகுப்பு மாணவர்கள் அழைத்து செல்லப்படவில்லை. ஆசிரியை ஒருவர் மாணவர்கள் சாதி பெயரை கூறி திட்டுகிறார். எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டம் என அப்பள்ளி மாணவர்கள் கலெக்டர் மேகநார ரெட்டி மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஞானகவுரி நேற்று பேராபட்டி பள்ளிக்கு வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதில் விசாரணை அறிக்கை ஒரு சில நாட்களில் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.