Block Education Officer Corruption வட்டார கல்வி அலுவலர் வண்டவாளம்
Block Education Officer Corruption
அரசு துறையில் அலுவலர்கள் ஆதிக்கம் எப்போதும் மேலோங்கிதான் இருக்கும். இதில் கல்வித்துறை பெரிய விதிவிலக்கு அல்ல. அவ்வப்போது, கல்வித்துறையில் நடக்கும் கலகங்கள் குறித்து, நமது இணையதளத்தில் புட்டு, புட்டு வைக்கிறோம்.
அந்த வரிசையில் தற்போது நம்மிடம் ராமநாதபுரம் மாவட்ட தகவல் ஒன்று கசிந்துள்ளது. இங்கு 11 ஒன்றியம் உள்ளது. அந்த மாவட்டத்தில் பூ பெயர் கொண்ட ஒரு வட்டார கல்வி அலுவலா் உள்ளார். அதே மாவட்டத்தை சேர்ந்த இவர், ஆசிரியர்கள் குறைதீர் முகாம் மனுக்களுக்கு தீர்வு காண கட்டிங் எதிர்பார்ப்பதாக ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
Also Read: TN School Education Department Scam| கல்வித்துறையில் முறைகேடு
அரசாணை எண் 385, 2.11.2012 என்ன சொல்கிறது என்றால், பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் குறைதீர் மனுக்கள் மீது தீர்வு காண அல்லது பதிலளிக்க அதிகபட்சமாக 60 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கிறது. தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்துறையின் 2020ல் வெளியான அரசாணை எண் 73ல் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு அல்லது தற்போது நிலை குறித்து கண்டிப்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அலுவலர்கள் இதனை முறையாக செயல்படுத்தாத காரணத்தால், இவை அனைத்தும் ஏட்டில் உள்ளது.
வட்டார கல்வி அலுவலர் வண்டவாளம்
ஆனால், இந்த வட்டார கல்வி அலுவலர் ஆசிரியர்கள் குறைதீர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு ஆசிரியர் கொடுத்த மனு மீது கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் வரை வேண்டுமென்ற காலதாமதம் செய்து கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, ஆசிரியர்கள் பிஎப் லோனுக்கு விண்ணப்பித்தால் லட்சத்திற்கு 1 சதவீதம் கமிஷனாம். அதாவது, ஒரு லட்சத்திற்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டுமாம். இவருடைய ஹைலெட் என்னவென்றால் “ஆசிரியர்கள் பொன்முட்டை இடும் வாத்துகளாக இருக்க வேண்டுமாம்”. அதாவது, ஆசிரியர்கள் அதிகாரிகளுக்கு படி அளக்க வேண்டுமாம். கமிஷன் குறித்து கேட்டால், கருவூலக அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என கூறுகிறாராம்.
மேலும், ஆசிரியர்கள் உயர் கல்வி படிக்க முன் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால், மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப கிட்டதட்ட மூன்று மாதங்கள் செய்வதாக ஆசிரியர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். உடனடியாக அனுப்ப, கட்டிங் எதிர்பார்க்கிறார்களாம்.
மேலும், அலுவலர்கள் இப்படி நடந்துகொண்டால் கல்வித்துறையின் நிர்வாகம், பள்ளியின் செயல்பாடுகள் எவ்வாறாக இருக்கும் என்று நீங்களை நினைத்துக்கொள்ளுங்கள். மாநிலத்தில் உள்ள கல்வி அதிகாரிகள் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனடியாக கண்காணித்து சாட்டையை சுழற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.