You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

bharathidasan katturai in tamil | பாரதிதாசன் கட்டுரை

bharathidasan katturai in tamil

பொருளடக்கம் 

முன்னுரை 

மொழிபற்று

நாட்டுப்பற்று

பெண் உரிமை

புரட்சிக்குரல்

படைப்புகள் 

மறைவு

முடிவுரை

முன்னுரை 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட அன்னார் பாரதியாரிடம் கொண்ட ஆழ்ந்த பற்றின் காரணமாக தமது பெயரை பாரதிதாசன் என அமைத்துக் கொண்டார். “புரட்சி கவிஞர்” எனும் சிறப்பினையும் பெற்றவர்.

பொருளுரை

புரட்சி கவிஞர் பாரதிதான் புதுச்சேரியில் கனகசபை இலக்குமி அம்மையார் தம்பதியினருக்கு 29.4.1981இல் மகனாக பிறந்தார். பாரதிதாசன் தொடக்க கல்வியை திருப்புளிசாமி என்பவரிடமும், தமிழ் இலக்கண, இலக்கியங்களை புலவர் அ பெரியசாமி மற்றும் புலவர் பங்காரு பக்தரிடமும் கற்றார். பாரதிதாசன் 37 ஆண்டுகள் தமிழாசிரியராக பணிபுரிந்தவர். 

மொழிப்பற்று

தாய்மொழியாம் தமிழ் மொழி பற்று தனியாத பற்றுடையவர் பாவேந்தர். தமிழை தம் உயிர் என்றார். உயிரையும், உணர்வையும் வளர்ப்பது தமிழே என்றார். “தன்னை பழித்தவனை தாய் தடுத்தால் விட்டுவிடு”, தமிழை படித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே! என்றார். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!, என்றார்.

Read Also: மகாத்மா காந்தி கட்டுரை 

தமிழ்மொழி தமிழன் தோன்றிய நாளில் தோன்றியது என்றால், தமிழன் தோன்றியது மக்கள் தோற்றத்தின் முற்பகுதி என அறிதல் வேண்டும். எனவே, தமிழ்மொழி முதன்மையானது. உலகு தோன்றிய நாளிலிருந்தே நாகரிகத்தினை பெற்ற ஒரே மொழி தமிழ்மொழி. இது நாவலந் தீவில் தோன்றிய இயல்பான மொழி என்றார், பாரதிதாசன். 

“செந்தமிேழ! உயிரே ! நறுந்தேனே!

செயலினை மூச்சினை உனக்களித்தேேன” என்றார். 

நாட்டுப்பற்று 

தாய்நாடாம் தமிழ்நாட்டின் மீது தனியாக பற்றுடையவர் பாவேந்தர். தமிழ்நாடு எல்லா துறைகளிலும் ஏற்றம் பெற வேண்டும் என்றார். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்றார். மொத்தத்தில் பிறர் போற்ற வேண்டும் என்றார்.

பெண் உரிமை

தம்முடைய முன்னோடி ஆகிய பாரதியாரை போலவே இவரும் பெண் உரிமைக்கு குரல் கொடுத்தார். பெண் அடிமை தீரும் வரை மண்ணடிமை தீராது என்றார். ஊமை என்றே பெண்ணை உரைக்கும் வரை ஆமை நிலைதான் ஆடவர்க்கு என்றார். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் எனில் அக்கழகத்தின் துணை வேந்தர் பெண்ணாகத்தானே இருக்க முடியும். வீடும் நாடும் விளங்கப் பெண் உரிமை வேண்டும் என்றார்.

“பெண்ணடிமை தீரும்மட்டும் பேசுந் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே“

 புரட்சி குரல்

பாவேந்தர் பாடல்களில் தனி இடம் பெற்றது புரட்சி கருத்துகளே. மூட நம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, தொழிலாளர் உயர்வு, பொதுவுடமை கொள்கை ஆகிய சமூக முற்போக்கு கருத்துகளே எதிரொலித்தன. உழைக்காத எவரும் உலகாளக் கூடாது, என்றார்

படைப்புகள்

குடும்ப விளக்கு, இரண்டு வீடு, புரட்சி கவி, பாண்டியன் பரிசு, கண்ணகி புரட்சிக் காப்பியம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், அழகின் சிரிப்பு, இசை அமுது ஆகியவை அவரிடம் படைப்புகளும் சில. 

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ல் இவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தது. 1990-ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது.

மறைவு

மொழியுணர்விலும், சமுதாய சிந்தனையிலும், தன்னை கரைத்துக்கொண்ட கவிஞர் 21.4.1964 அன்று மறைவுற்றார். 

முடிவுரை

பாவேந்தர் படைப்புகள் அனைத்துமே படிப்பினைகள், அவற்றை படிப்பதன் மூலம் நாமும் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, சமூக தொண்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் உரிமை ஆகிய பண்புகள் பெறுகிறோம். தமிைழயும், அதை பேசுகின்ற தமிழ் மக்களையும் இந்த உலகத்தையும் காப்பாற்ற வேண்டிய இன்றியமைாத எண்ணற்ற புரட்சிக் கவிதைகளை பாடிய பாரதிதாசனை நினைத்து போற்றுவோம். நல்ல சமுதாயம் உருவாக மாணவர்களாகிய நாம் முன் நிற்போம்.