You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

மகாத்மா காந்தி கட்டுரை – சேவை திருமகன் மகாத்மா காந்தி

mahatma gandhi katturai in tamil

முன்னுரை 

வரலாற்றை உருவாக்குவதில் ஒரு தனிமனிதரின் பங்கு எவ்வளவு என்பதற்கு இமயம் போன்ற உதாரணம்தான் மகாத்மா காந்தி. பாரத நாட்டின் மேன்மையை உயர்த்த பாடுபட்டதால் தேசத்தந்தை என்றும், பாராமர்களின் வாழ்விற்கு உழைத்ததற்காக அண்ணல் காந்தி என்றும் அழைக்கப்பட்ட காந்தியடிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

காந்தி பிறந்த ஊர் 

இந்தியாவில் வடமேற்கே உள்ள போர்பந்தரில் வணிகர் குலத்தில் காபாகாந்தி – புத்திலிபாய் இணையருக்கு பிறந்தார். இளமையில் அவரது இயற்பெயர் மோகன்தாசு சுரம்சுந்த் காந்தி, இது இவரது குடும்பப் பெயர். 

‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, தேசிய நாட்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.  காந்தியின் பிறந்த நாளைச், ‘சர்வதேச அகிம்சை நாள்' ஆக 2007 ல் அங்கீகரித்து ஐ.நா. சபை கொண்டாடி வருகிறது.

காந்தி இளமை காலம் 

பள்ளி பருவத்தில் தன்னுடன் இளமை பயிலும் மாணவர்களுடன் சேர்ந்த சில தீய பழக்கங்களை செய்தார். ஆனால் அரிச்சந்திரன் நாடகம் பார்த்த பின் திருந்தி வாழ சபதம் மேற்கொண்டு அவ்வாறே வாழ்ந்தாா். சிறுவனாக இருந்த பொழுது மத விசயங்களை பற்றி அவர் மனதில் பெருங்குழப்பங்கள் ஏற்பட்டன. பழமை பிடிப்பிலேயே வளர்க்கப்பட்டவர் என்பதால் அவருக்கும் கஸ்தூரிபாய்க்கும் அவரது 12 வயதிலியே திருமணம் நடந்தது. 19 வயது இளம் மனைவியை பிரிந்து மேல் படிப்பிற்காக இலண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பினார். 

காந்தி வழக்கறிஞர் பணி 

வழக்கறிஞர் பணியினை பம்பாயில் தொடங்கிய காந்தியடிகள் வருவாய் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை நீதியும், நேர்மையும் அரங்கேற வேண்டும் என்று அல்லும், பகலும் உழைத்தார். இவரது நேர்மையான செயல்பாட்டை அறிந்த தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த அப்துல்லா என்பவர் தனது நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னையை தீா்க்க அவரை தென்னாப்பிரிக்க அழைத்து சென்றார். 

mahatma gandhi katturai in tamil
அங்கு அப்துல்லா கம்பெனி வழக்குகளை கவனித்ததோடு உப்புக்கு வரிபோட்ட வெள்ளையர்களை எதிர்த்து போராட உப்பு சத்தியாகிரகம் எனும் போராட்டத்தை தொடங்கினார். இந்திய நாட்டில் தயாரிக்கப்பெறும் ஆடையையே அணிய வேண்டும், சுதேசி கதர் ஆடையை அணியுமாறு மக்களை வேண்டிக்கொண்டார். கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சை முறையில் ஆங்கிலேயேருக்கு எதிராக சுதந்திர போராட்டத்தை தொடங்கினார். 

வெள்ளையனே வெளியேறு இயக்கம், உண்ணா நோன்பு நோக்கம், ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் போன்ற போராட்டங்களை நடத்தி இந்திய விடுதலைக்கு வித்திட்டவர் காந்தியடிகள். 

மத நல்லிணக்கம் 

இந்து – இஸ்லாமியர் ஒற்றுமையை காந்தி தம் உயிரோடு இருந்த வரை கட்டிப்பாதுகாத்து வந்தார். அவரது விடுதலை போராட்டம் என்பது ஆங்கிலேயேர்களிடம் இருந்து இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற ஒரு நோக்கத்தை மட்டும் கொண்டதல்ல, மதங்களுக்கிடைய இணக்கம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, அந்நியத் துணி பகிஷ்காிப்பு, பெண் விடுதலை பன்முகம் கொண்ட சமுதாய சீர்திருத்த இயக்கமாகவும் விரிவடைந்தது. 

எளிய வாழ்வும், மறைவும் 

இராட்டையில் நூல் நூற்று, கைத்தறி, கதர் ஆடைகளை அணிந்தார். குடிசையில் வாழ்ந்தார். சாதி, பேதம் இல்லாமல் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக சமர்மதி ஆசிரமும் ஏற்படுத்தினார். அனைவரும் தாய்மொழியிலேயே கற்க வேண்டும் என கூறினார். பல நூற்றாண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த இந்திய நாட்டை விடுவிக்க பாடுபட்ட மகாத்மா காந்தி கோட்சே என்ற கொடியவனின் குண்டுக்கு இரையாகி ஜனவரி 30ஆம் நாள் 1948ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு நீங்கினாலும், இந்திய வரலாற்றில் என்றும் வாழ்வார். 

முடிவுரை 

60 ஆண்டுகள் நாங்கள் பாதுகாத்த ஒரு மகத்தான மனிதரை சுதந்திர ஆறு மாதத்தில் பறிகொடுத்தது என்றார் வின்ஸ்டன் சாச்சில். காந்தி புகழ்பாடுவோம், அவர் வாழ்வில் நடப்போம்.